இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

“இதுபோன்ற இயக்குனர்களிடம் இரையாகி விடாதீர்கள்..” மிஷ்கின் குறித்து விஷால் அறிக்கை..

துப்பரிவாளன் 2 படத்தை தானே இயக்க உள்ளதாக கூறியுள்ள நடிகர் விஷால், மிஷ்கின் போன்ற் இயக்குனர்களிடம் இரையாக வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

vishal and myskkin

மிஷ்கின் இயக்கி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து அவர் விலகியதை அடுத்து, அப்படத்தை தற்போது விஷாலே இயக்கி நடிப்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கனடா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற ஸ்க்ரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் பணத்தை ரூ. 35 லட்ச ரூபாய் செலவழித்துள்ளார்.

இவைதவிர, தங்குமிடம், பயணம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தைத் தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தினார். தயாரிப்பாளரின் 13 கோடி ரூபாய் பணத்தைச் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஒரு இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா? இல்லை .

vishal mysskin

படத் தயாரிப்பின்போது, ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக் காட்டினால் அது தவறா? இங்கிலாந்தில் 3 – 4 மணிநேரப் படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காக இரவு பகலாக படப்படிப்பு நடத்தலாம் சுட்டிக்காட்டிய விஷயங்களா? இல்லை.

நீங்கள் உங்கள் சொந்த குழந்தையை அநாதை இல்லத்தில் கைவிடுவது போல இது மோசமான செயலாக இருக்கிறது. இது தான் எனக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு, இந்தப் படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் விஷால் பிலிம் ஃபேக்டரி அலுவலகத்திற்கு வருவது ஒரு இயக்குநருக்குச் சரியானதா?

நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுகத் தயாரிப்பாளரோ, அறிமுகத் தயாரிப்பாளரோ, எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி அவர்கள் ஷூட்டிங்கின் போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

vishal statement

அதனால், முன்னோக்கி சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும் உறுதிசெய்கிறேன்.

இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரை கெடுப்பது அல்ல, ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம்.

இயக்குநராக அறிமுகமாக நான், உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

குடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த நபர்; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Wed Mar 11 , 2020
ஜெயங்கொண்டம் அருகே நடுரோட்டில் குடிபோதையில் பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போக்சா சட்டத்தில் வழக்கு பதிவு  செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்கு ரோட்டை சேர்ந்தவர் 40 வயதான முருகன். அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்துவரும் இவர் பணி முடித்துவிட்டு குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் சின்ன வளையம் […]
Ariyalur child. 1jpg

You May Like