’வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லையா’..? ’திருமணத்திற்கு முன்பே சொல்லிவிடுங்கள்’..!! – ஐகோர்ட்

பெண்கள் தங்களுக்கு வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லை என்பதை திருமணத்துக்கு முன்பே சொல்லிவிட வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் விபா கன்கன்வாடி மற்றும் ராஜேஷ் எஸ்.படீல் ஆகியோர் அமர்வில் வந்த வழக்கொன்றில், பெண்ணொருவர் தன் கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தன்னை மிகமோசமாக துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண், தனக்கு திருமணமான ஒரு மாதத்துக்கு பின்னிருந்து கணவர் குடும்பத்தார் கார் வாங்க வேண்டுமென்று கூறி, தன் வீட்டிலிருந்து ரூ.4 லட்சம் வரை வாங்கிவர அறிவுறுத்தி தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் வழக்கில் குறிப்பிட்டிருப்பதாக Live Law இணையதளம் தெரிவித்துள்ளது.

’வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லையா’..? ’திருமணத்திற்கு முன்பே சொல்லிவிடுங்கள்’..!! ஐகோர்ட்

அப்பெண்ணின் தரப்பில் “ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றுக் கூறி மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது எனது கருத்தரிப்புக் காலம் நிறைவடையவில்லை என்று மருத்துவர் கூறியதால், எனது மாமியார் மற்றும் கணவரின் சகோதரி இணைந்து கொண்டு நான் அவர்களை ஏமாற்றிவிட்டதாக கூறி என்னை தாக்கினர்” எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஆங்கில தளமொன்று கூறியுள்ளது.

’வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லையா’..? ’திருமணத்திற்கு முன்பே சொல்லிவிடுங்கள்’..!! ஐகோர்ட்
மும்பை உயர்நீதிமன்றம்

இப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில், “இவருக்கு இதுபோன்று வழக்கு தொடுப்பது வாடிக்கையான விஷயம்தான். தனது முன்னாள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கூட இதேபோல இவர் பல வழக்குகள் தொடுத்துள்ளார். அந்த வழக்குகள் எல்லாவற்றிலும் இப்பெண்ணால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர் அல்லது இவரே வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார்” என வழக்கறிஞர் மூலம் பதில் தரப்பட்டது.

’வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லையா’..? ’திருமணத்திற்கு முன்பே சொல்லிவிடுங்கள்’..!! ஐகோர்ட்

இதற்கு நீதிமன்றம் தரப்பில், “ஒருவரின் முந்தைய வழக்குகளை அடிப்படையாக வைத்து, அவருக்கு வழக்கு கொடுக்கும் மனப்போக்கு இருந்திருக்கிறது. அதனால் இந்த வழக்கை ஏற்கக்கூடாது என சொல்வதை ஏற்க இயலாது. அதேநேரம் அப்பெண் தரப்பில் தனக்கு என்ன மாதிரியான உடல், மன நல சிக்கல்கள் நிலவுகிறது என்பதை குறிப்பிடவில்லை. அப்பெண்ணின் வீட்டில் வீட்டுவேலை செய்வோர் யாரேனும் இருக்கிறார்களா என்பதையும் அப்பெண் குறிப்பிடவில்லை. எவ்வித விவரமும் இல்லாமல் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டை, சட்டப்பிரிவு 498-ன் (கணவர் மற்றும் கணவரின் உறவினர்களால் துன்புறுத்தப்படுவது) கீழ் கணக்கில் கொண்டு தண்டனை வழங்க இயலாது.

’வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லையா’..? ’திருமணத்திற்கு முன்பே சொல்லிவிடுங்கள்’..!! ஐகோர்ட்

அதேநேரம் வழக்கு தொடுத்திருப்பவர் சொல்வதுபோல, திருமணமான பெண்ணொருவரை வீட்டு வேலை செய்ய சொல்வதென்பது கொடுமைப்படுத்துவது என்றாகாது. அதேபோல அது வீட்டுவேலை செய்யும் தொழிலாளி என்ற பொருளிலும் வராது. திருமணம் செய்துக்கொள்ளும் பெண்ணுக்கு, வீட்டு வேலைகளை செய்வதில் விருப்பமில்லை என்றால், அதை அவர்கள் திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்துவிட வேண்டும். அதன்மூலம், அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதா வேண்டாமா என்பது குறித்து அந்த மாப்பிள்ளை மறுஆய்வு செய்வார். இதன்மூலம் திருமணத்துக்குப்பின் சிக்கல்கள் எழாமல் இருக்கும்” எனக்கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீதிமன்றம் தரப்பில் இப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது. மேலும், உள்ளூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றவியல் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டது.

Chella

Next Post

#Get ready for Thunivu Pongal - பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது அஜித்தின் "துணிவு" அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

Fri Oct 28 , 2022
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத்-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் துணிவு. இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வீரா, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, சிபி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். […]
அமெரிக்காவில் வெளியாகும் துணிவு..!! உரிமத்தை கைப்பற்றிய KGF-2, RRR, PS1 வினியோகஸ்தர்..!!

You May Like