டி.ஆர்.பாலுவுக்கு இன்னும் 2 ‘டேப்’ உள்ளது!… அது வெளியாகும்போது அவர் அரசியலில் இருப்பாரா?… அண்ணாமலை!

‘2ஜி ஊழல் பைல் 9வது டேப்’ வெளியான பின், டி.ஆர்.பாலு அரசியலில் இருக்கிறாரா என்பதை பார்ப்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பெரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., 21 சதவீதம் ஓட்டுகளை வாங்கும் என, கணிப்புகள் வருகின்றன, அந்த அளவுக்கு கட்சி முன்னேறி உள்ளது. அற்புதமான தமிழகம் வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மீது, 70 சதவீதம் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என, எல்லா கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. இவற்றின் வெளிப்பாடு, மக்களவை தேர்தலில் தெரியவரும். என்னுடைய பாதயாத்திரையின் 200வது தொகுதி பயணத்தின் போது, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வருகிறார். 234வது தொகுதிக்கு, பிரதமர் மோடி வர இருக்கிற தேதி அறிவிக்கப்படும். சென்னையில் யாத்திரை செல்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். மக்களின் எண்ணமாக வரக்கூடிய கருத்துக் கணிப்புகளை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது. வரலாறு காணாத வகையில் பா.ஜ., வெற்றி பெறும்.

நாடாளுமன்றத்தில் அமைச்சரை மோசமான வார்த்தையில் பேசுவதில் இருந்து, தி.மு.க., மூத்த தலைவர்களின் ஜாதி வன்மம் வெளிப்படுகிறது. அரசியல் சாமானிய மக்களை நோக்கி செல்வதை, டி.ஆர்.பாலு புரிந்து கொள்ள வேண்டும். டி.ஆர்.பாலுவுக்கு இன்னும் இரண்டு ‘டேப்’ உள்ளது. டி.ஆர்.பாலு பேசியது ஆணவத்தின் உச்சம். வயது வேறு, ஆற்றல், திறமை வேறு. டி.ஆர்.பாலு வயதானதால், பெரிய அரசியல்வாதி என நினைத்தால் தவறு. டி.ஆர்.பாலு எதை பேசினாலும், அண்ணாமலையோ, பா.ஜ.,வோ கைகட்டி கேட்க வேண்டும் என்றால், அது மிராசுதாரர்தனம். அவர் மிராசுதாரர் அல்ல. அவரிடம் வேலை பார்க்கும் கொத்தடிமை கூட்டம் நாங்கள் அல்ல. அடுத்து, ‘2ஜி ஊழல் பைல் ஒன்பதாவது டேப்’ வெளியான பின், டி.ஆர்.பாலு அரசியலில் இருக்கிறாரா என்பதை பார்ப்போம் என்று அண்ணாமலை கூறினார்

1newsnationuser3

Next Post

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை Regional Mobility Hub-ஆக மாற்ற வேண்டும்..! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...!

Fri Feb 9 , 2024
கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்திலும், அதற்கு வெளியே சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை மண்டல போக்குவரத்து மையமாக (Regional Mobility Hub) மாற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 6 அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் 9 அதிகாரிகள் […]

You May Like