இந்த இடங்களில் எல்லாம் ட்ரோன்கள் பறக்க தடை …

சென்னையில் தலைமைச் செயலகம் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் எல்லாம் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் வியூ காட்சிகள் என இன்றைய தலைமுறையினர் முக்கிய இடங்களில் மட்டுமின்றி பல பகுதிகளை ட்ரோன்கள் மூலம் பதிவு செய்கின்றனர். இந்நிலையில் ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகம் , விமான நிலையங்கள் , நீதிமன்றங்கள் போன்ற இடங்களில் அனுமதி இன்றி ட்ரோன் பறக்க விடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகள் , கோயில் திருவிழக்கள் , குறும்படம் தயாரித்தல் போன்றவற்றிற்கு  முறையாக காவல்துறையின் அனுமதி பெற்ற பின்னரே ட்ரோன்கள் இயக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்கள் சிறைச்சாலைகள் , அரசு தொலைக்காட்சி நிறுவனம் , பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் , தேசிய பூங்காக்கள் , காடுகள் போன்ற இடங்களில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விட்டு சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி உரிய அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்க விடப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Post

கவனம்... அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம்...! ஒரே நாளில் எத்தனை வழக்குகள் பதிவு...?

Fri Oct 28 , 2022
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகத் தமிழக அரசு கடந்த 19-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் புதிய அபராத தொகை விதிக்கும் நடைமுறை நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. புதிய மோட்டார் வாகன […]

You May Like