பேட்டால் மனைவியை தாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காவல்துறை நோட்டீஸ்!

இந்திய அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் வினோத் காம்ப்ளி. அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் இவர் தற்போது மது போதையில் தனது மனைவியை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டு மும்பை காவல்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மும்பையைச் சார்ந்த பிரபலமான கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி  சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் 90களில் இந்திய அணிக்காக  கிரிக்கெட் விளையாடிய வீரர். சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பள்ளி கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய கிரிக்கெட் காலத்தில் இருந்தே ஏதேனும் ஒரு சர்ச்சைகளில்  இவர் சிக்கிக் கொண்டே இருப்பார். சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு காரை தாக்கியதாக இவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று  மது போதையில் தனது மனைவியை தாக்கியதாக அவரது மனைவி ஆண்ட்ரியாக ஹெவிட்  பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு போதையில் மனைவியுடன் தகராறு செய்த  வினோத் காம்ப்ளி  அவரை கிரிக்கெட் பேட்டை கொண்டு தாக்க முயன்றிருக்கிறார். அப்போது அவரது மனைவி அதனை தடுத்து பேட்டை அவரிடம் இருந்து  பறித்திருக்கிறார். பின்னர் சமையல் பாத்திரத்தை எடுத்து  மனைவியின் தலையில் தாக்கியிருக்கிறார் காம்ப்ளி.  இதில் காயமடைந்த அவரது மனைவி  வீட்டை விட்டு வெளியேறி தனது  இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின்னர் பாந்த்ரா காவல் நிலையம் சென்று அவர் வினோத் காம்ப்ளி தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார்அளித்ததை தொடர்ந்து  அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Baskar

Next Post

58 வயது பெண்ணை கடத்தி  கொலை! பலாத்காரம் செய்த  16 வயது சிறுவன் கைது!

Sun Feb 5 , 2023
மத்திய பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுவன் 58 வயது பெண்மணியை கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் கைலாச்புரி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த ஒன்றாம் தேதி கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத  ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத்  தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் சடலத்தைக் கண்டு அதிர்ச்சி […]

You May Like