தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி..!! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு அறிவிப்பு..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் இடையே நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. பாஜக கூட்டணியை பொறுத்தமட்டில் அந்த கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பாமக 10 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

இதுதவிர ஓபிஎஸ் அணிக்கு ராமநாதபுரம், பாரிவேந்தரின் ஐஜேகே கட்சிக்கு பெரம்பலூர், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு சிவகங்கை, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தென்காசி, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தேனி மற்றும் திருச்சி லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தனது விருப்பத்தின்படியே டிடிவி தினகரன், தேனியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Read More : Ration | தமிழக ரேஷன் கடைகளில் UPI பரிவர்த்தனை இருக்கா..? இல்லையா..? குழப்பத்தில் பொதுமக்கள்..!!

Chella

Next Post

ஜிம்முக்கு வரும் பெண்களிடம் உடலமைப்பை காட்டி பணம் பறித்த மிஸ்டர் வேர்ல்ட்..!! ஜாமீனில் வெளிவந்தும் அடங்காத சேட்டை..!!

Sat Mar 23 , 2024
மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்றவரும், இன்ஸ்டா பிரபலமான மணிகண்டன் சென்னை காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2021இல் மணிகண்டன் ஏற்கனவே கவிதா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு சந்தியா என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி பண மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆணழகன் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். குறிப்பாக, மணிகண்டன் ஜிம்மிற்கு வரும் […]

You May Like