
சென்னை: தமிழகத்தில் மண்டத்திற்குள் செல்வதற்கான பொதுப்போக்குவரத்தினை ஜூன் 30 ஆம் தேதி வரை தடை செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கொண்டுவருவதற்காக நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலானது. அதில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் பொதுப்போக்குவரத்திற்கு ஜூன் 1 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? என்ன நடவடிக்கையினை மேற்கொள்ளலாம் என்பது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும் ஏற்கனவே தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள 8 மண்டலத்திற்குள் இ-பாஸ் அவசியம் என்ற நடைமுறையினை ரத்து செய்துள்ளது. இனிமேல் மண்டலம் விட்டு மண்டலம் செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாவட்ட ஆட்சியர்கள், கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் என தெரிவித்துள்ளனர். எனவே ஆட்சியர்களின் கோரிக்கை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் 17500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது எனவும், பரிசோதனைகளும் அதிகப்படுத்திவருவதாகவும் தெரிவித்தார். மேலும் நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.