டெல்லியில் நில அதிர்வு..!! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!!

டெல்லியில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், பணி செய்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இன்று பிற்பகல் 3.36 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அடுக்குமாடி கட்டிடங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு வடக்கு மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் யாருக்கும் பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மேற்கு நேபாளத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, டெல்லி, தேசிய தலைநகர் பகுதி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

இந்த பிரச்சனை இருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க..!! எச்சரிக்கும் சுகாதாரத்துறை..!!

Sat Nov 11 , 2023
சென்னையில் தீபாவளி கொண்டாட்டத்தால், காற்று மாசு அளவு அதிகரித்து பொதுமக்களுக்கு உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகமான பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க தொடங்கி விட்டனர். இதனால் காற்று மாசுபாடு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக காற்றின் தரக் குறியீட்டில் 101-200 என்ற மிதமான வரம்பில், ஏற்பட்ட இந்த ஏற்றம் காரணமாக மூச்சுத் திணறலை அனுபவிக்கக்கூடிய ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளை கொண்ட நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த […]

You May Like