'40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..!

கள்ளகாதலியை அடைய நினைத்து தர்ம அடி வாங்கிய மின்சார ஊழியர்… காவல்துறை மீது பழிபோட்ட ஊழியர்…

சேலத்தில், இளம்பெண்ணை அடைய நினைத்து அப்பெண்ணின் கணவரிடம் அடி வாங்கிவிட்டு சக ஊழியர்களிடம் காவல்துறை அடித்ததாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

selam eb bad affair

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் மின்சார ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகள் தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் சிலரிடம் போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், மின்சார ஊழியரான பழனிசாமி விடுமுறை இல்லை என்பதால் வழக்கம்போல மின்சார பணிக்கு சென்றுள்ளார். சக பணியாளர்களிடம் தான் வரும் வழியில் போலீசார் தன்னை தாக்கியதாகவும், சதுரங்கவாடி இந்தியன் வங்கி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தனது வாகனத்தை நிறுத்தி விசாரித்ததாகவும், மின்சார ஊழியர் என்று கூறிய பின்னரும் அதை நம்பாமல் தன்னை சராமாரியாக தாக்கியதாகவும், மேலும் தனது அடையாள அட்டையை காட்டுவதற்குள் கடுமையாக தக்கியதாக தனது முதுகையும் பழனிசாமி சக பணியாளர்களிடம் காண்பித்துள்ளார்.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மின்சார ஊழியர்கள் பழனிசாமிக்கு நடந்த கொடுமை குறித்து சங்கத்தின் மூலம் மின்வாரிய தலைவருக்கு புகார் அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக சமூக வலைதளங்களிலும் அவர்கள் கண்டனத்தை பதிவு செய்ததோடு, போலீசாரை கண்டித்து போராட்டம் வரை சென்றது. இதனையடுத்து இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த துணை கண்காணிப்பாளர் செளந்தரராஜன் இதுகுறித்து விசாரணை நடத்த கூறினார்.

விசாரணையில், போலீசார் அனைவரும் தாங்கள் அவரை தாக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறினர். இதனையடுத்து மின்சார ஊழியர் தாக்கியதாக் சொன்ன இடத்தின் சிசிடிவி கேமராவில் தேடிய போது, பழனிச்சாமி போலீசார் இருந்த வழியில் வரவே இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து சந்தேகமடைந்து அவரிடம் விசாரித்ததில், உண்மை சம்பவம் அம்பலமானது. மின்வாரியத்தில் பயிற்சிக்கு பழக வந்த 22 வயதான இளம்பெண்ணிடம் தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அவருக்கு நிரந்தர வேலை வாங்கி தருவதாக ஜாலியாகவும், தந்திரமாகவும் பேசி மயக்கி கள்ளக்காதலை வளர்த்து இருவரும் பழகி வந்துள்ளார்.

இதை அறிந்த அப்பெண்ணின் கணவர், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் பழனிசாமியுடன் பழகுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார். இருப்பினும் பழனிசாமி தொடர்ந்து அப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அப்பெண்ணின் கண்வர், மனைவி மூலம் பழனிசாமியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதையடுத்து, வேலை முடிந்து வீட்டிற்கு செல்லாமல் கள்ளகாதலியை பார்க்க வீட்டிற்குள் நுழைந்த பழனிசாமிக்கு கணவர் மூலம் தர்ம அடி தாறுமாறாக விழுந்துள்ளது.

இதில் காயமடைந்த அவர் மனைவிக்கு தெரிந்தால் அசிங்கம் என எண்ணி போலீஸ் மீது தவறான குற்றச்சாட்டை கூறி தப்பிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைக் கேட்டதும் மின்சார ஊழியர்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, பழனிசாமி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், சக ஊழியர்களும் காவல்துறையினரிடம் வருத்தம் தெரிவித்து சென்றனர். கள்ளக்காதலுக்காக காவல்துறை மீது பொய் குற்றச்சாட்டு கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

நான் ஏன் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும்... பெண் காவலரை பழிவாங்கிய வங்கி மேலாளர்...

Sun Apr 5 , 2020
ஊரடங்கு உத்தரவால் அனைத்து போக்குவரத்தும் முடங்கிய நிலையில், ஆட்டோவில் வந்த வங்கி மேலாளரை பெண் காவலர் ஒருவர் திருப்பி அனுப்பியதால் வங்கி மேலாளர் அவரை தனது வங்கிக்கு வரும்போது பழி வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகமக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் தங்களை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவை அரசு அமல்படுத்தியது. இருப்பினும், மக்கள் வெளியில் சென்று தனது அன்றாட வேலைகளை பார்த்து வருகின்றனர். […]
thiruvotriyur The bank manager who avenged the woman police ..

You May Like