எடப்பாடி, ஜெயக்குமார் கட்சியிலிருந்து நீக்கம்..! அதிமுக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு..!

எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்குவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் ’முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். அவருக்கு வத்தலக்குண்டு மக்கள் ஆதரவு.

image

எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரை தலைமைக் கழகத்தில் இருந்து நீக்கி விட்டோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக முதன்முறையாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தர எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தாரா ராகுல்..? பரபரப்பு தகவல்

Sun Jul 3 , 2022
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்குமாறு ராகுல் காந்தி கேட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் […]
யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தர எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தாரா ராகுல்..? பரபரப்பு தகவல்

You May Like