‘எடப்பாடிக்கு சிறை தண்டனை’..!! ’ஜெயக்குமார் தமிழ்நாட்டில் நடமாடவே முடியாது’..!! ஓபிஎஸ் எச்சரிக்கை..!!

ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ”தேர்தல் மூலமாகவே அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர். கட்சி விதிகளை கொண்டு வந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி எனும் சர்வாதிகாரி போலியான பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த விதிகளை காலில் போட்டு மிதித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமியை தேர்தலில் இருந்து ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சின்னம்மா, ஊர்ந்து ஊர்ந்து சென்றுதான் முதல்வர் ஆனார். அதிமுகவுக்காக எடப்பாடி பழனிசாமி என்ன தியாகம் செய்தார்? அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதா சொல்லும் சொல்லை மீறாத தொண்டனாக அதிமுக-வில் இருந்துள்ளேன். ஒரு தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்த பின்னர் 8 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. வழிகாட்டும் குழுவில் முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கவில்லை. தான்தோன்றித்தனமாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி செய்த தவறுக்காக தண்டனை அனுபவிப்பார். ஜெயக்குமார் நாவை அடக்கி பேச வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்நாட்டிற்குள் எங்கும் நடமாட முடியாது. மக்களவை தேர்தலில் நம்முடன் கூட்டணி வைத்து போட்டியிட சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது” என்றார்.

1newsnationuser6

Next Post

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பிரதமர் மோடிக்கு..? அண்ணாமலை சொன்ன சூசக பதில்..!!

Tue Feb 6 , 2024
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி, வேட்பாளர்கள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, மக்களவை தேர்தலையொட்டி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகத்தை திறக்க மாநில பாஜகவுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. தென்சென்னை, வடசென்னை, நெல்லை ஆகிய தொகுதிகளில் […]

You May Like