நாமக்கல் மாவட்டத்தில் தினமும் உற்பத்தியாகும் நான்கு கோடி முட்டைகளில் தேக்கத்தை குறைக்க முட்டை விலை 300 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா பரவலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. மதுரை மற்றும் தேனி என பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் முழு ஊரடங்கில் உள்ளது. மேலும் அனைத்து மாவட்ட எல்லைகளும் தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் பல உணவு பொருட்களும் விலை சரிவை சந்தித்துள்ளது.
உணவு பொருட்கள் தேக்கி வைத்தால் கெட்டுவிடும் ஆபாயம் உள்ளதால் விற்பனையாளர்கள் விலையை குறைத்து விற்றுவிட முயலுகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து தான் பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்திற்கு வாரம் 2.50 கோடி முட்டைகள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த நான்கு மாதமாக பள்ளிகள் மூடியுள்ளதாலும் பெரு நகரங்களில் போடப்பட்டுள்ள ஊரடங்காலும் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.
நாமக்கலில் ஒரு நாளைக்கு நான்கு கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இதனை சமாளிக்க நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை விலையை குறைத்து விற்க முடிவு செய்துள்ளது. இதன்படி ஒரு முட்டை ரூ.3 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 30 முட்டைகள் கொண்ட அட்டை ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி செலவை விட 70 காசுகள் குறைத்து விற்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.