பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த மின் கட்டண உயர்வு..!! ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89..!! நுகர்வோர்கள் அதிர்ச்சி..!!

கர்நாடகாவில் 200 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மின்சார கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு மேல் ஒரு யூனிட்டிற்கு ரூ.2.89 ஏற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கர்நாடகாவில் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 200 யூனிட் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் 89 காசுகள் ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், பயன்படுத்தப்பட்ட மொத்த யூனிட்டிற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே ஒரு யூனிட் கட்டணம் ஒரு ரூபாய் 49 பைசாவாக இருந்தது. பெரும்பாலான வீடுகளில் சராசரியாக 200 யூனிட்டுகள் மேல் பயன்படுத்தப்பட்டு வருவதால், இந்த விலையேற்றம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலையேற்றத்தை கண்டித்து அம்மாநிலத்தின் தர்பத் பகுதியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

CHELLA

Next Post

”பயில்வான் செத்தா பட்டாசு வெடித்து கொண்டாடுவேன்”..!! நடிகை ரேகா நாயர் ஆவேசம்..!!

Tue Jun 6 , 2023
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேகா நாயர். பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார். இது சர்ச்சையான நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ரேகா நாயரை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து, திருவான்மியூரில் நடைப்பயிற்சி சென்ற பயில்வான் ரங்கநாதனை வழிமறித்த ரேகா நாயர், அவரை கடுமையாக திட்டினார். அங்கு இருவரும் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயில்வான் ரங்கநாதனை ரேகா நாயர் தாக்கவும் செய்தார். பயில்வான் […]
Rekha Nair

You May Like