3000 பேருக்கு வேலை!… ரூ. 7,614 கோடியில் ஓலா – தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாடு அரசிற்கும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையே ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையடுத்து, ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.150 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை காணொலி மூலம் திறந்துவைத்த முதலமைச்சர், சென்னையில் ரூ.110 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள GX குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் திறந்து வைத்தார்.

இதனைதொடர்ந்து, நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைக்கும் வகையில் தமிழ்நாடு, அரசிற்கும் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Kokila

Next Post

சர்ச்சைக்குள்ளான LBW அவுட்!... வைரலாகும் விராட் கோலியின் ரியாக்‌ஷன்!...

Sun Feb 19 , 2023
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் LBW அவுட் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரது ரியாக்‌ஷன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டெல்லியில் அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த […]

You May Like