காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பெண்..! RCB வெல்ல ஸ்கெட்ச் போட்டது யார்..? உண்மையை போட்டுடைத்த சாஹல்..! தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்..! "என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..!

“இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு..

இந்திய ராணுவத்தினரின் வீரத்தையும், கோபத்தியும் எதிரிகள் கண்டுள்ளனர் என்று ராணுவ வீரர்கள் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி, இந்திய – சீன ராணுவத்தினருக்கு ஏற்பட்ட மோதலில் 15 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 35 பேர் வரை இறந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டாலும், அந்நாட்டில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து சீனா வெளியிடவில்லை. இதனையடுத்து இரு நாட்டின் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லடாக், லே பகுதியில் பிரதமர் மோடி, திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பிரதமர் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், நரவானே ஆகியோர் உடன் இருந்தனர்.

modi nnn

இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது “ இந்திய ராணுவ வீரர்களின் வீரம், அவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருக்கும் மலையை விட உயரமானது. ராணுவத்தினரின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது. இந்திய நாட்டை காக்க உயிர் நீத்தவர்களுக்கு மீண்டும் எனது வீர அஞ்சலியை செலுத்துகிறேன். கல்வான் பள்ளாத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.

இந்திய வீரர்களின் தைரியம், துணிச்சலை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் விரும்புகிறோம். இந்திய ராணுவ வீரர்களின் நெருப்பு போன்ற ஆக்ரோசத்தை எதிரிகள் பார்த்துள்ளனர். அமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் அச்சம் கொள்ளப்போவதில்லை.

ladakh speech n

எல்லை விரிவாக்கத்திற்கான காலம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சிக்கான நேரம். எல்லை விரிவாக்கம் சக்தி இழந்துவிட்டன. உலகில் உள்ள அனைத்து நாடுகளை விட இந்திய ராணுவம் வலிமையானது மற்றும் சிறந்தது என்பதை நீங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். லே முதல் லடாக் வரை, கார்கில் முதல் சியாச்சின் வரை அனைத்து பிராந்தியங்களும் நமது இராணுவத்தின் துணிச்சலைக் கண்டுள்ளன. உங்கள் தைரியத்தின் கதைகள் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கின்றன” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

“காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட்

Fri Jul 3 , 2020
காவல்துறை புகார் ஆணையத்தை அமைக்காத, ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின் போது ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசாரின் கொடூர தாக்குதல் தான் அவர்களின் இறப்புக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் இதில் தொடர்புடைய 4 காவல்துறை அதிகாரிகளை கைது செய்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி […]
கமல்ஹாசன்

You May Like