செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்ய முதன் முறையாக ”நாமேட் அமல்” என்ற அரபு விண்கலம் ஒன்று தயாராகி வருகிறது. இன்னும் சில நாட்களில் விண்ணில் ஏவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட் ஏற்கனவே புவியின் சுற்றுப்பாதைக்கு செயற்கை கோளை அனுப்பியது. மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் ஒரு விண்வெளி வீரர் சென்றுள்ளார். முதல் அரபு விண்வெளி வீரராக சவுதி அரேபியாவின் இளவரசர் சுல்தான் பின் சல்மான் அல்-சவுத் 1985ம் ஆண்டு அமெரிக்க விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்றுள்ளார்.

இந்த வரிசையில் ஐக்கிய அரபு எமிரேட் தொடங்கப்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதால், செவ்வாய் நோய்க்கிய பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதில் யு.ஏ.இ அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த விண்கலத்திற்கும் “நாமேட் அமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு நம்பிக்கை என்று பொருளாம்.

ஜப்பானின் தீவு ஒன்றிலிருந்து புறப்பட்டும் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய 493 மில்லியன் கிலோமீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த பயணம் 7 மாதங்களில் முடிவடைந்து செவ்வாய் கிரகத்தை திட்டமிட்ட பாதையில் சுற்றி வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்கலம் இரண்டு வருடங்களுக்கு செவ்வாய் குறித்த தகவல்களை புவிக்கு அனுப்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ‘செவ்வாயில் தண்ணீர்’ என்ற நோக்க்கதையே முக்கிய ஆராய்ச்சியாக மேற்கொள்ளப் போவதாக இதன் திட்ட இயக்குனர் சாரா அல் அமிரி கூறியுள்ளார்.