உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

“என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை..

இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் ? கட்சிக்கு ஒற்றை தலைமையா..? அல்லது இரட்டை தலைமையா..? 11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

admk meet

4 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது. அதாவது, அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து இன்றே முடிவெடுக்க செயற்குழுவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்த விவாதம் தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்த பின் முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். இதனால் ஒருமித்த முடிவெடுக்க முடியாமல் கட்சி தலைமை திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர் யார் என்பது வரும் 7-ம் தேதி அறிவிக்கப்படும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது தன்னை ஜெயலலிதா தான் முதல்வர் ஆக்கியதாகவும், எடப்பாடி பழனிசாமியை சசிகலாத முதல்வராக்கினார் என்று ஓபிஎஸ் நேரடியாக கூறினாராம்.

ops

அதற்கு பதிலளித்த முதல்வரோ, இருவரையுமே சசிகலா தான் முதல்வர் ஆக்கினார் என்று பதில் அளித்தாராம். தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மத்ததாக ஓபிஎஸ் கூறியுள்ளார். அதற்கு, முதல்வராக நான் சிறப்பாக பணியாற்றவில்லையா எனவும், பிரதமர் மோடியே தனது தலைமையிலான ஆட்சியை பாராட்டியதாகவும் பழனிசாமி கூறினாராம்..

அதிமுகவில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் விவகாரம், அதிமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. இதுவரை இரு தரப்பு ஆதரவாளர்கள் மட்டுமே மாறி மாறி கருத்து யுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ் இருவருமே நேரடியாக மோதிக் கொண்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser1

Next Post

கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..!

Mon Sep 28 , 2020
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 22ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழக்கமாக உடல் பரிசோதனை செய்ய சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து, விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், […]
கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..!

You May Like