சசிகலா உடல்நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்.. தடுப்பூசியால் ஏற்படும் அடுத்தடுத்த மரணங்கள்.. ஹரியானாவில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி… சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது.. விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. சசிகலா அதிமுகவில் இணைந்தாலும், இணையாவிட்டாலும் பிரச்சனை என்னமோ முதல்வருக்கு தான்.. பரபரக்கும் அரசியல் களம்.. "சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு வேறு விதமா யோசிக்க வைக்குது.." சீமான் கருத்து.. ஒரு லாஜிக் வேணாமா..? வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்..? யானை மீது எரியும் டயரை வீசிய மனித மிருகங்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.. கமல்ஹாசனின் கழுத்தில் மிதிக்கும் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் பத்ரகாளி புகைப்படத்தால் சர்ச்சை… ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு.. எப்போது முதல் தெரியுமா.? பறவைக் காய்ச்சல் அபாயம்..! எவை செய்யலாம்.. எவை செய்யக்கூடாது..! அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ..! அதிர்ச்சி..! பிரபல வங்கி லாக்கரில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கரையானுக்கு விருந்தான சோகம்..! அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது ஸ்மார்ட்போன்..! விலையை கேட்டா அசந்து போயிருவீங்க..! 90ஸ் கிட்ஸ் கனவு கன்னி சிம்ரனின் மகனா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் சைக்கோவை விட கொடூரமானவர்.. நண்பர் வெளியிட்ட பகீர் தகவல்கள்..

பாகிஸ்தானிற்கு தடை விதித்த ஐரோப்பிய யூனியன் : மோசடியில் ஈடுபட்டது அம்பலமானதால் நடவடிக்கை

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள் லைசன்ஸ் மோசடியில் ஈடுபட்டு இருப்பது அம்பலமானதை அடுத்து, அந்த ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு ஐரோப்பிய யூனியன் 6 மாதங்கள் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு 6 மாதம் தடை விதித்தது ஐரோப்பிய யூனியன்

பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட விமான விபத்தை தொடர்ந்து, விமானிகளின் லைசன்ஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அங்கு பணி புரிந்து வரும் 860 விமானிகளில் 262 பேர் போலியான லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் அல்லது விமானி தேர்வில் முறைகேடு செய்தவர்கள் என அந்நாட்டு விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதில் பாதிக்கும் அதிகமானோர் பாகிஸ்தானின் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்சில் பணிபுரிபவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து பாகிஸ்தான் ஏர்லைசில் பணிபுரியும் 434 விமானிகளில் 141 உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பாகிஸ்தான் விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த இந்த கருத்து உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகள் பாகிஸ்தான் விமான சேவையை தவிர்க்கும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளனர்.

imran khan

லைசன்ஸ் மோசடி விவகாரம் பெரும் பிரச்சனையாகி உள்ள நிலையில் பாகிஸ்தான் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு 6 மாதங்கள் தடை விதித்துள்ளது. இந்த தடையின் மூலம் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் இனி ஐரோப்பிய யூனியனுக்கு பயணம் செய்ய முடியாது.

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள தகவலை பாகிஸ்தான் விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இந்த தடை இன்று முதல் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் எனவும் அதன் பின்னர் நிலைமையை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் முடிவு எடுக்கப்படும் எனவும் ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

குறட்டை தொல்லை இனி இல்லை!

Wed Jul 1 , 2020
இரவில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை குறட்டை விடுதல். இதில் மட்டும் பிரச்சை உள்ளவர் நிம்மதியாக தூங்கலாம். எந்த பிரச்னையும் இல்லாத அருகில் படுத்திருக்கும் நபர் தான் தூக்கத்தை இழக்க நேரிடும். இதற்கு ஒரு மூலிகை வைத்தியம் இதோ. குறட்டை சளி போன்ற மூச்சு குழாய்களில் ஏற்ப்படும் அடைப்புகளால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்ப்பட்டு தன்னிச்சையாக வாய் வழியாக மூச்சு விட ஆரம்பிக்கும் போது ஏற்ப்படுகிறது. புகை,மது பழக்கம் உள்ளவர்கள், சளி […]
12 1497243330 snoring

You May Like