கடந்த சில தினங்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை இன்றும் (04.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலையேற்றம் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது பல சிறு குறு தொழில்முனைவோரை தான் அதிகம் பாதித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி உள்ள இந்த சூழலை சமாளிக்க மக்கள் போராடி வரும் நிலையில் அடிப்படை தேவையான பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது தொழிலை அதிகம் பாதித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு புறம் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி அதிகம் உள்ளதே காரணம் எனவும் மறுபுறம் இந்திய பண மதிப்பு குறைந்தது தான் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் மக்களின் இந்த போரிடர் வேளையில் ஏற்ப்படும் நிதி நெருக்கடியை அரசு செய்வது அதன் கடமைகளில் ஒன்று.