ஓபிஎஸ் வசம் இருந்த ஒரு பதவியும் பறிப்பு.. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் யார் தெரியுமா..?

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்..

பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்..

இந்த சூழலில் நேற்று முன் தினம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.. இதே போல் நேற்றும் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து ஆலோசித்ததாக தெரிகிறது..

இந்த சூழலில் எதிர்க்கட்சி தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே நிலவியது.. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விஸ்வநாதன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது..

இந்நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.. எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பான பரிந்துரையை சட்டப்பேரவை தலைவருக்கு அதிமுக தலைமை விரைவில் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது..

இதனிடையே எதிர்க்கட்சி துணைத்தலைவராக வேறு யாரையாவது நியமித்தால் ஏற்கக்கூடாது என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்திருந்தார்.. இதுதொடர்பான கடிதத்தையும் அவர் சபாநாயகருக்கு அனுப்பி இருந்தார்.. இதையடுத்து, எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணையில்லை..! கமல்ஹாசன்

Tue Jul 19 , 2022
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை என கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து, மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. […]

You May Like