திருச்சி: காதலித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.! கணவருக்கு அனுப்பிய காதலர்.! போலீசார் நடவடிக்கை.!

திருச்சியில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது முன்னாள் காதலன், அவருடன் எடுத்த தனிமையில் இருக்கும் புகைப்படங்களை கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மணப்பாறையில் உள்ள மருங்காபுரி தாலுகாவில் வசித்து வரும் 22 வயது பெண், தனது திருமணத்திற்கு முன்பு மருதப் பட்டியைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கருணாகரன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்தப் பெண் தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். கருணாகரன், இவர்கள் இருவரும் காதலித்தபோது ஒன்றாக எடுத்துக் கொண்ட, தனிமையில் இருக்கும் புகைப்படங்களை அந்தப் பெண்ணின் கணவருக்கும், அவரது உறவினர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்த அந்த பெண், மணப்பாறையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கருணாகரன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

பயங்கர விபத்து.! எரிவாயு வெடிவிபத்தில் இருவர் பலி.! 200க்கும் மேற்பட்டோர் காயம்.!

Fri Feb 2 , 2024
கென்யாவின் தலைநகர் நைரோபியில் நேற்று எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 271 நபர்களை அந்நாட்டில் உள்ள வெவ்வேறு சுகாதார நிலையங்களுக்கு அனுப்பியதாக கென்யாவின் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள எம்பகாசி பகுதியில் நேற்று நள்ளிரவுக்கு முன், அங்கிருந்த எரிவாயு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் அதில் […]

You May Like