துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

தேர்தல் பிரச்சாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.. மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.. இதில் அவர் மார்பில் குண்டு பாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.. ரத்த வெள்ள்த்தில் கீழே விழுந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காலை 11:30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக ஜப்பான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, 41 வயதான டெட்சுயா யமகாமி என்ற நபரை சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்புப் படையினரால் யமகாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் போலீசார் மீட்டனர். எனினும் அவர் சுடப்பட்டதற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருந்தார்.. ஷின்சோவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு நாட்டின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

2006 முதல் 2007 வரை மற்றும் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக ஷின்சோ அபே இரண்டு முறை பணியாற்றினார். 2006-ம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பதவியேற்றார். 52 வயதில், போருக்குப் பிந்தைய ஜப்பானின் இளைய பிரதமரானார். இருப்பினும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஒரு மேல்சபை தேர்தலில் தோல்வியடைந்ததால் அவர் பதவி விலகினார்..

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஷின்சோ அபேவின் LDP கட்சி, 2012 லோயர் ஹவுஸ் தேர்தலில் மகத்தான வெற்றி வெற்றி பெற்றதால், மீண்டும் ஜப்பானின் பிரதமரானார். ஷின்சோ பல தசாப்தங்களாக அரசியலில் இருக்கும் ஒரு சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது தாத்தா 1957 மற்றும் 1960 க்கு இடையில் பிரதமராக பணியாற்றினார், மேலும் அபேயின் தந்தை வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

’அதிமுகவின் ரகசியங்களை திமுகவிடம் கூறுகிறார் கே.பி.முனுசாமி’..! கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி

Fri Jul 8 , 2022
அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் கூறி, திமுகவின் கைக்கூலியாக கே.பி.முனுசாமி செயல்படுவதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, கடந்த வாரம் ஓபிஎஸ் திமுக-வை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால், முனுசாமி மகன் எம்.சதீஷ்க்கு கிருஷ்ணகிரியில் பால்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை 99 ஆண்டு வாடகைக்கு […]
மீண்டும் ஓபிஎஸ் அணிக்கே தாவுகிறாரா கே.பி.முனுசாமி..? எடப்பாடியின் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு..!!

You May Like