இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

இந்தியர்களே உஷார்: பாத்து செலவு பண்ணுங்க..

images 47

உலக நாடுகளை உயிர் பலியால் அச்சுறுத்தி வரும், கொரானா பொருளாதாரத்தையும் சிதைத்து வருகிறது. நோய் தொற்று பரவல் இந்தியாவிலும் வேகமெடுத்துள்ள நிலையில், அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் பெரும்பாலான மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.


கொரானா பாதிப்பு காரணமாக, அனைத்து தொழில்துறைகளும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக, போக்குவரத்து, சுற்றுலாத்துறை மற்றும் ஓட்டல் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த துறைகளில் சுமார் 5 சதவிதம் சரிவு காணப்பட்டாலே, இந்தியாவின் மொத்த வளர்ச்சி சுமார் 1% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தியாவின் பொருளாதாரம் இந்தாண்டு, 2% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது கொரோனாவின் வீரியத்தை பொறுத்து, மேலும் சரிவை சந்திக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவின் 80% நிறுவனங்கள், பணபுழக்கம் இல்லாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் தற்போது வரை கொரானாவின் தாக்கம் வீரியமடையாத நிலையில், அதன் தாக்கம் தற்போதே 53 சதவித நிறுவனங்களில் தெரிவதாக FICCI அமைப்பு கூறியுள்ளது. இந்திய ரசாயன துறையை பொறுத்தவரை, ஜீன்ஸ்க்கு போடும் சாயம் தொடங்கி, மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் வரை சீனாவிடம் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. கொரானா காரணமாக உள்நாட்டில் ரசாயன தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைவிட்டு போகும் நிலை உருவாகியுள்ளது. 2020ம் ஆண்டின் முதல் 6 மாதத்திற்கான வளர்ச்சி கற்பனை செய்ய முடியாத அளவிற்கு குறையும் என்பதில் நிபுணர்கள் ஒற்றை கருத்தில் உள்ளனர்.

images 46

இந்த சூழலில், இனி வருங்காலங்கள் மேலும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சாமானிய மக்கள், தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தை மிக சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய தருணம் என்றும் பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மட்டுமே கொரானாவின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஜூன் வரை நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரானாவின் தாக்கத்தினால், இந்தியாவில் சுமார் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகக் கடுமையதாக பாதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

ஒரே நாளில் 2000 பேர் பலி; செய்வதறியாது திகைக்கும் அமெரிக்கா

Thu Apr 9 , 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் உகான் பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தாலும், இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, உலகம் முழுவதும் […]
கொரோனா

You May Like