உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

12 ஆண்டுகளாக பிரபல நிறுவனத்தின் பீர் தொட்டியில் சிறுநீர் கழித்து வந்த ஊழியர்?

பிரபல பீர் நிறுவனமான பட்வைசரின் (Budweiser) தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக பீர் தயாரிக்கும் தொட்டிகளில் சிறுநீர் கழித்ததாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

chennai memes beer 2 1024x590 1

கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவ தொடங்கிய செய்தி ஒன்று, பீர் பிரியர்கள் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. பீர் தொட்டியில் சிறுநீர் கழிக்கப்பட்டதாக வெளியான அந்த தகவல், இணையவாசிகளுக்கு சரியான வாய்ப்பாக அமைந்தது. அந்த செய்தியில், பட்வைசர் பீர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரான 34 வயது வால்டர் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக பீர் தொட்டிகளில் சிறுநீர் கழித்து வந்ததாக ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டிருந்தது. fort Collins பகுதியில் உள்ள தொழிற்சாலையில் மட்டுமே அவர் பணிபுரிந்து வந்ததாகவும், மற்ற பகுதிகளில் உள்ள பீர்-கள் தன்னிடம் இருந்து தப்பித்து விட்டதாக அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அந்நிறுவனத்தின் நான்கில் மூன்று பங்கு பீர் தயாரிப்பு fort Collins ல் தான் நடந்து வந்தது. வால்டர், தனது நண்பர்களுடன் இருக்கும் போது அவர்கள் பட்வைசர் பீர்களை குடிப்பதை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.

chennai memes beer 5

நடிகர் வடிவேலு காமெடி போல், ‘இனி இத குடிக்கும் போதெல்லாம் அதானடா ஞாபகம் வரும்’ என்பது போல் மீம்கள் குவியத் தொடங்கின. இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இதுதொடர்பான மீம்கள் அதிகளவில் இணையத்தில் பரவின. ஊழியர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாக பீர் தொட்டிகளில் சிறுநீர் கழித்ததாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது. அந்த வலைதள பக்கத்தின் இறுதியில், ‘இந்த வலைதளம் நகைச்சுவையான பக்கம். இதன் ஒரே நோக்கம் பொழுதுபோக்கு மட்டுமே. நகைச்சுவை மற்றும் புனைகதைகள் உள்ள இந்த தளம் உண்மையான செய்திகளை கொண்டிருக்காது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பீர் பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

1newsnationuser4

Next Post

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும், தமிழறிருஞருமான மன்னர் மன்னன் இன்று காலமானார்..

Mon Jul 6 , 2020
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் இன்று உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 92. முதுபெரும் தமிழறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி, பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முகங்களை கொண்டவர் மன்னர் மன்னன். மேலும் மொழிப்போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர். புதுச்சேரி வானொலி நிலைய ஆசிரியராக பணியாற்றிய மன்னர் மன்னன், சுமார் 50 நூல்களை எழுதியுள்ளார். புதுவை தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் […]
மன்னர் மன்னன்

You May Like