உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..?

கடந்த மே மாதம் முதலே இந்திய – சீன எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லடாக் பற்றி தினமும் பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன.


இந்த நிலையில், இந்திய ராணுவம் கைலாய மலை மற்றும் மான்சரோவர் பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. மேலும் கைலாய மலையில் இந்திய ராணுவ வீரர்கள் தேசிய கொடியை ஏற்றியதாக ஒரு புகைப்படமும் வைரலாகி வருகிறது. இந்தியாவுட சேர்ந்த பிறகு எடுக்கப்பட்ட கைலாய மலை புகைப்படங்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்திய

ஆனால் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி.பக்க்ஷியின் ட்விட்டர் கணக்கிலிருந்தும் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்திய இராணுவம் கைலாய மலையை கைப்பற்ற அதை நோக்கி நகர்வதாக அதில் குறிப்பிட்டிருந்தது. 3,000 மேற்பட்டோர் இந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்துள்ளனர். இத்துடன் இதுகுறித்த செய்திகள் நின்றுவிடவில்லை. ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்டை சித்தரித்து பல பயனர்கள், இந்திய இராணுவம் கைலாய மலைத்தொடரை கைப்பற்றியுள்ளதாக ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

114425369 pic3  1

இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. பிரபல செய்தி ஊடகம் இதுகுறித்து நடத்திய உண்மை கண்டறியும் ஆய்வில், பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் இந்த படத்தை ஆய்வு செய்த போது, ​​வீரர்கள் கொடி அசைக்கும் படங்கள் பல இடங்களில் கிடைத்தாலும், அவற்றில் எதிலுமே பின்னணியில் கைலாய மலை, காணப்படவில்லை.

2020 ஜனவரி 26 அன்று இந்தியா டுடே இணையதளத்தில் வெளியான ஒரு வீடியோவில் இந்த படம் இடம்பெற்றிருந்தது. மேலும் ஜம்மு – காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் குழந்தைகள் மற்றும் வீரர்கள் 71-வது குடியரசு தினம் கொண்டாடியது குறித்தும் அதில் குறிப்பிட்டிருந்தது.

ரிவர்ஸ் இமேஜ் தேடலின்போது,​​ அதே 9 வீரர்களின் படம் , ஒரு ஃபேஸ்புக் பக்கத்திலும் காணப்பட்டது. அதில் ஐந்தாவது வீரரின் கையில் தேசியக்கொடி இருந்தது. இந்த படம் கடந்த ஜூன் 17-ம் தேதி பகிரப்பட்டது. மேலும் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி, ஒரு யூடியூப் வீடியோவில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கைலாய மலையில் வீரர்களின் கொடியசைப்பு படத்தையும், இந்தப் படங்களையும் ஒப்பிடும்போது , ​​அவற்றில் உள்ள பின்னணியைத் தவிர மீதி எல்லாமே ஒன்றுதான். அதாவது வீரர்களின் கொடி அசைக்கும் படத்தில், கைலாய மலை பின்னணியில் புதிதாக சேர்க்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

அப்படி எனில், சமூக ஊடகங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் மேற்கோள் காட்டப்பட்டு, கைலாய மலைத்தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது. எந்த அளவுக்கு உண்மை.. என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய டெல்லி பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் ஒருவர் கைலாய மலைத்தொடர் இந்திய எல்லைக்குள் இல்லவே இல்லை என்று தெரிவித்தார்.

114425833 pic4.

மேலும் பேசிய அவர் “மேற்கு திபெத்தின் டிரான்ஸ் இமயமலையில் கைலாய மலை உள்ளது. இது லடாக் மலைத்தொடரின் முடிவிற்குப் பிறகே ஆரம்பமாகிறது. மேற்கு திபெத் சென்று முடிந்துவிடும் இந்த மலைத்தொடருக்கு பிறகு தான் கைலாய மலைத்தொடர் ஆரம்பமாகிறது,” என்றும் கூறினார்.

இதன் மூலம் கைலாய மலையைப் பற்றி வெளியான புகைபடங்கள் முற்றிலும் தவறானவை என்றும், இந்திய வீரர்கள் கைலாய மலையை கைப்பற்றவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

முன்ந்தாக, லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்பாக ஏப்ரல் மாதத்திலிருந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ம் தேதி, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இருப்பினும், இந்த சம்பவத்தில் சீன தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 29ம் தேதி சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. பின்னர் இரு நாடுகளின் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இது இரு நாடுகளுமே பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

சீனா
`

இந்த சூழலில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே சீனா பெரும் எண்ணிக்கையில் படைகளை களமிறக்கி உள்ளதாகவும், பீரங்கி உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை குவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் இந்தியா கைலாய மலையை கைப்பற்றி இருந்தால், அதுகுறித்தும் அவர் பேசியிருப்பார். ஆனால் அவர் அப்படி எந்த கருத்தையும் தெரிவிக்காததால், இந்தியா எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை என்பது தெளிவாகிறது.

1newsnationuser1

Next Post

ஐபிஎல்.... சென்னை அணி த்ரில் வெற்றி!

Sun Sep 20 , 2020
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது 13 வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி அபுதாபியில் உள்ள மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணியின் தொடக்க […]
ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்... சென்னை அணி பந்துவீச்சு!

You May Like