தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்..! "என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..! லட்சக்கணக்கானோரை உயிருடன் புதைத்து கட்டப்பட்ட கோபுரம்.. உலகின் கொடூர மன்னன் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள்.. சுற்றுலா வழிகாட்டியை சுத்துப்போட்டு..! அறையை பூட்டி அலறவிட்டு..! நட்சத்திர ஓட்டலை நாசம் செய்த பலாத்கார கும்பல்..!

“ஒரே நாளில் கொரோனா குணமாகாது.. ” கோவை மூலிகை மைசூர்பா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்..

ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் என்று மூலிகை மைசூர்பா விற்பனை செய்து வந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மூலிகை மைசூர்பா

கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் நெல்லை லாலா ஸ்வீட் என்ற கடை இயங்கி வருகிறது. அக்கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம் தான் தற்போது மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று நோட்டீஸ் விநியோகித்து வந்தார். 19 வகையான மூலிகைகளை பயன்படுத்தி இந்த மூலிகை மைசூர்பாவை தயாரித்து வருவதாகவும் ஸ்ரீராம் தெரிவித்தார்.

மேலும் இந்த மைசூர்பாவை சாப்பிட்டுபவர்களுக்கு கொரோனா நோய் ஒரே நாளில் குணமாகும் என்று கூறிய அவர், கடந்த 3 மாதமாக அதனை விற்பனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த மூலிகை மைசூர்பாவை ஒரு நாளைக்கு 4 துண்டுகள் சாப்பிட்டு வந்தால் விரைவில் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதில் உள்ள 19 வகையான மூலிகை பொருட்கள் உடனடியாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் இருக்கக்கூடிய கொரோனா தொற்றை அழிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி மத்திய அரசு விரும்பினால் இந்த மூலிகை மைசூர்பாவின் ஃபார்முலாவை, எவ்வித பணம், பொருள் எதிர்பார்ப்பின்றி இலவசமாக வழங்க தயாராக உள்ளதாகவும் ஸ்ரீதர் தெரிவித்தார்.

herbal

இந்நிலையில் கோவையில் மூலிகை மைசூர் பா விற்பனை செய்து வந்த இனிப்பு கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மேலும் கடை உரிமையாளர் ஸ்ரீராமிடமும் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து 18 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் மைசூர்பா சித்த மருத்துவத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அனுமதி அளிக்கவில்லை என திட்டவட்டமாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அந்த இனிப்பு கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அரசின் எந்த அனுமதியுமின்றி தவறான தகவலை பரப்புவதாக கூறிய அதிகாரிகள், அக்கடையில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான 120 கி மைசூர்பா பறிமுதல் செய்யப்பட்டது.

1newsnationuser1

Next Post

அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதி.. தனிமைப்படுத்திக் கொண்ட முதலமைச்சர்..

Wed Jul 8 , 2020
ஜார்கண்ட் மாநிலத்தில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஜார்கண்ட மாநில அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். முதல்வர் வீட்டிற்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான அமைச்சர் மித்லேஷ் தாகூருடன் முதல்வர் நேற்று தொடர்பில் இருந்தார். அமைச்சருக்கு இன்று கொரோனா தொற்று […]
அமைச்சர்

You May Like