ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதியவரை 10 கிமீ ட்ரை சைக்கிளில் அழைத்து சென்ற குடும்பத்தினர்; சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனைகள் அலைக்கழிப்பு!..

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதியவரை 10 கிமீ ட்ரை சைக்கிளில் அழைத்து சென்ற குடும்பத்தினர்!.

ஊரடங்கினால் போக்குவரத்து வசதி இன்றி கடும் வெயிலில், காய்ச்சலினால் அவதிப்பட்டிருந்த மதுரையை சேர்ந்த முதியவரை 10 கிமீ ட்ரைசைக்கிளிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மனைவி மற்றும் மகள். இங்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என அலைக்கழித்த மருத்துவமனைகள்.


மதுரை பாலரெங்காபுரத்தை சேர்ந்த 75 வயதான முதியவர் கடந்த 2 நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்துள்ளார். மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகன வசதி இல்லாமல் குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட முதியவரை அவரது மனைவி மற்றும் மகள் தள்ளுவண்டியிலேயே அமர வைத்து அருகிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் இங்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் எனவும் தத்தனேரியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதியவரை 10 கிமீ ட்ரை சைக்கிளில் அழைத்து சென்ற குடும்பத்தினர்; சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள்!..

இதனையடுத்து தத்தனேரி மருத்துவமனை சென்ற போது, அங்கேயும் அவர்களை சிகிச்சை அளிக்கப்படவில்லை. நீங்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு தான் போகவேண்டும் என்று கூறியுள்ளனர். வேறு வழியின்றி முதியவரின் மனைவி மற்றும் மகள் மீண்டும் ட்ரை சைக்கிளில் கிளம்பி சென்று மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் முதியவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதியவரை 10 கிமீ ட்ரை சைக்கிளில் அழைத்து சென்ற குடும்பத்தினர்; சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள்!..

இதனையடுத்து கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்ட முதியவருக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், இது போன்று மருத்துவமனைகள் காட்டும் அலட்சியப்போக்கு மக்களிடையே பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

1newsnationuser2

Next Post

மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி!...

Sun Jun 28 , 2020
மதுரையில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததன் காரணமாக அவர், மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் கொரொனாவின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் இன்று மட்டும் 284 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ள 1995 பேரும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் மருத்துவமனை மற்றும் மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரொனா முகாம்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]
மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி!...

You May Like