நடிகை சுஷ்மிதா சென் உடன் டேட்டிங் செய்யும் பிரபல தொழிலதிபர்.. திருமணம் குறித்து வெளியிட்ட தகவல்..

வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி தொடர்பான புகார்களுக்கு மத்தியில் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரபல தொழிலதிபர் லலித் மோடி, லலித் மோடி 2010 முதல் லண்டனில் இருந்து வருகிறார்.. இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் உடனான தனது உறவு நிலையை லலித் மோடி அறிவித்தார்.. அவரின் பதிவில் “மாலத்தீவு உள்ளிட்ட பல இடங்களின் உலக சுற்றுப்பயணத்திற்குப் பிறகு லண்டனுக்குத் திரும்பி உள்ளேன்… என்னுடைய சரிபாதி என்று சுஷ்மிதா சென்னை சொல்லி தான் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை.. ” என்று குறிப்பிட்டுள்ளார்.. மேலும் சுஷ்மிதா சென் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்திருந்தார்..

மேலும் மற்றொரு ட்வீட்டில், தங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும், இருவரும் டேட்டிங் செய்கிறோம் என்றும் லலித் மோடி தெளிவுபடுத்தினார். இருப்பினும், திருமணம் “ஒரு நாள் நடக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. லலித் மோடியின் பதிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் ரீட்வீட்களையும் பெற்றன.

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், 1996 ஆம் ஆண்டு தஸ்தக் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் ரட்சகன் படத்திலும், முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி பாடலிலும் அவர் நடித்திருப்பார்.. மேலும் பாலிவுட்டில். பிவி நம்பர் 1, மைனே பியார் கியூன் கியா, மைன் ஹூன் நா மற்றும் நோ ப்ராப்ளம் படங்களில் நடித்திருந்தார்.. சுஷ்மிதா கடைசியாக ஆர்யா 2 என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி எது? செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை..!

Fri Jul 15 , 2022
சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் சாதி குறித்து தேர்வில் கேட்கப்பட்டது மன்னிக்கவே முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக […]
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து போராட்டம்..! தேர்வுத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்..! பரபரப்பு

You May Like