பிரபல இந்திய வீரர் மீது போக்சோ வழக்கு.! இன்ஸ்டா தோழியால் சிக்கல்.!

பிரபல இந்திய ஹாக்கி அணியின் வீரர் வருண் குமாரின் மீது பெங்களூரில் ஒரு பெண், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்த பொழுது அந்த பெண்ணிற்கு வயது 17 என்பதால், அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

இந்திய ஹாக்கி அணியின் வீரர் வருண் குமார், இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர். அவர் தற்போது பஞ்சாபில் வசித்து வருகிறார். பெங்களூரில் வசிக்கும் 22 வயது பெண் ஒருவர், வருண் குமாரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

அந்தப் பெண், தனக்கு 17 வயது இருக்கும்பொழுது இன்ஸ்டாகிராம் மூலம் வருண் குமார் அறிமுகமானதாக தெரிவித்தார். கடந்த 5 வருடங்களாக வருண் குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக, புகார் ஒன்றை காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்.

விளையாட்டு பயிற்சிகளுக்காக பெங்களூரில் உள்ள சாய் ஸ்டேடியத்திற்கு வந்த போது, தன்னுடன் உடலுறவு கொண்டதாக தெரிவித்தார். அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூர் காவல் நிலையத்தில், வருண் குமாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு (FIR) செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது தலைமறைவாகியுள்ள வருண் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்ற போது, இமாச்சல பிரதேச அரசு, வருண் குமாருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

என் மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு..!! சைதை துரைசாமி பரபரப்பு அறிவிப்பு..!!

Tue Feb 6 , 2024
சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகர் பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவருக்கு வெற்றி துரைசாமி என்ற மகன் உள்ளார். சினிமா தயாரிப்பாளரான வெற்றி துரைசாமி, படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அப்படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றுள்ளார். கடந்த 4ஆம் தேதி மதியம் வாடகை கார் ஒன்றை எடுத்துக் கொண்டு வெற்றி துரைசாமி மற்றும் […]

You May Like