அரசு வழங்கும் ரூ.6,000 வேண்டுமா…? 10-ம் தேதிக்குள் இந்த ஆவணம் இணைத்திருக்க வேண்டும்…!

மத்திய அரசின்‌ பிரதம மந்திரி கிசான்‌ சம்மன்‌ நிதி திட்டத்தின்‌ கீழ்‌ நாடு முழுவதும்‌ உள்ள விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஆண்டொன்டிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும்‌ 3 தவணையாக ரூ.2,000 வீதம்‌ இந்த நிதி உதவி விவசாயிகளின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது.

கிசான் முறைகேடு... சரியான தகவல் அளித்தால் வெகுமதி...சிபிசிஐடி அறிவிப்பு!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் பயனாளிகள் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும், மேலும் அதே தேதிக்கு முன் தங்கள் e-kyc புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங்கி கணக்குடன் இணைப்பது எப்படி…?

முதலில் நீங்கள் PM Kisan Samman Nidhi கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையைப் பார்வையிடவும். அடுத்து உங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை மற்ற ஆவணங்களுடன் வங்கி அதிகாரியிடம் சமர்ப்பிக்கவும். பிரதமர் கிசான் ஆதார் வங்கிக் கணக்கை இணைப்பதை அதிகாரி செயல்படுத்துவார். உங்கள் விவரங்கள் இப்போது சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும் உங்கள் மொபைல் போனில் ஒரு செய்தியைப் பெறுவீர்கள். அதன் பிறகு ஆதார் இணைந்து விட்டது உறுதியாக விடும்.

ஆன்லைனில் eKYC புதுப்பிப்பது செய்வது எப்படி..?

முதலில் pmkisan.gov.in என்ற இணையத்திற்கு செல்ல வேண்டும். பிறகு eKYC-இன் இணைப்பு வலது பக்கத்தில் காணப்படும். அங்கு ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மொபைலில் 4 இலக்க ஓடிபி வரும் அதை உள்ளிடவும். அடுத்து உங்கள் eKYC செயல் முடிக்கப்படும். ஒரு வேலை தவறானது என்று வந்தால் நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குச் சென்று சரி செய்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

தீபாவளிக்கு 5 நாள் பட்டாசு வெடிக்க அனுமதி!.... விடுமுறை அறிவித்து சட்டம் இயற்றிய அமெரிக்கா!

Thu Feb 9 , 2023
அமெரிக்காவில் தீபாவளி பண்டிக்கை அன்று பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியும், பொது விடுமுறை அறிவித்தும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தியாவை போலவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், அந்தந்த நாட்டு சட்டத்திட்டங்களின் படியே வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனடிப்படையில், அமெரிக்காவில் தீபாவளி பண்டிகைக்கு 2007ம் ஆண்டு அந்நாட்டு அரசு அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து, அங்கு, தீபாவளி பண்டிகை கொண்டாடத்தில் […]

You May Like