கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

சென்னையிலும் இனி விவசாயம் செய்யலாம்…!!! தனது புதிய முயற்சியால் அசத்தும் புதுமைப்பெண்…

3f6a016d c478 4403 9e1b b3e138ce9acd

காலங்களுக்கு ஏற்ப பல விஷயங்கள் மாறினாலும், என்றும் மாறாமல் அப்படியே பசுமையாய் இருப்பது விவசாயம் மட்டுமே. கிராமப்புறங்களில் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில், நகர மக்களும் விவசாயத்திற்கு ஆதரவு குரல் கொடுக்கும் வகையில் மாடித்தோட்டம் போன்ற பல புதுமைகளை செய்து அசத்தி வருகின்றனர். காலை முதல் இரவு வரை இயந்திர வாழ்க்கை வாழும் பலரும் அவ்வப்போது இயற்கையை காக்கவும் களம் இறங்குகின்றனர். அந்த வகையில் பொறியியல் பட்டதாரி ஒருவர் விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க தன்னாலான முழு முயற்சிகளை செய்து வருகிறார். அவரைப்பற்றி தெரிந்து கொள்வதற்குமுன் உங்களிடம் முக்கியமாக சிலவற்றை பகிர கடமைப்பட்டுள்ளோம்.


ரசாயனம் டூ ஆர்கானிக்…!!!

7d3d0e9f 6c7c 426a 87fc a76c8de76c79

காய்கறிகள், பழங்கள் என இயற்கையாக விளையும் பொருட்களில் கூட அனைவரும் லாபத்திற்காக ரசாயனங்களை கலந்து விற்பனை செய்கின்றனர். பல நாட்களுக்கு காய்கறிகள் கெடாமல் இருக்கவும், பூச்சி தாக்குதல்களில் இருந்து அதனை பாதுகாக்கவும் பல ரசாய உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக அதனை வாங்கி உபயோகிக்கும் மக்கள் ஏதோஒரு வகையில் உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் ஆர்கானிக் காய்கறிகளும் பழங்களும் பலருக்கும் கனவாகவே உள்ளன. அப்படி கடைகளில் கிடைக்கும் ஆர்கானிக் பொருட்களோ தலைசுற்றும் அளவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. சிலர் மாடித்தோட்டம் அமைத்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை மாடியிலேயே வளர்த்து வருகின்றனர். வாடகை வீட்டில் உள்ளோர், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் என பலர் மனதில் ஆசை இருந்தும் அதற்கு செயல் வடிவம் கொடுக்க முடியாமல் திணறுகின்றனர். அவர்களுக்காகவே புதிய முயற்சி ஒன்றை தொடங்கியுள்ளார் இவர்.

இனி விவசாயமும் சுலபம் தாங்க;

de24c037 fce1 4a84 94bc cec971f43796

இயற்கை மீதான ஆர்வத்தால் தனது ஐடி வேலையை தூக்கி எறிந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா, இயற்கையை சார்ந்தே தனது வேலையும் அமைய வேண்டும் என எண்ணி அதற்காக புதிய யுக்தியையும் கையில் எடுத்து வெற்றி கண்டுள்ளார். கடைகளில் வாங்கும் காய்கறிகளை விட நாமே நம் கண்முன்னால் வளர்க்கும் காய்கறிகளை சமைத்து சாப்பிடும் போது ஏற்படும் திருப்தி அலாதி என்பதை உணர்ந்த அவர், MY HARVEST என்ற அமைப்பின் மூலம் நகரங்களில் வாழும் மக்களுக்கும் விவசாயம் செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.

ab6e2839 55bc 4956 8351 493b0c8c51ec

வீட்டில் இடம் இல்லாத காரணத்தால் மாடித்தோட்டம் தொடங்க முடியாமல் இருப்பவர்களுக்காக திண்டிவனம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் 3 ஏக்கரில் விவசாய நிலத்தை வாங்கி அதை குடும்பம் ஒன்றிற்கு 1000 சதுர அடியாக பிரித்து காய்கறிகளை வளர்த்து வருகிறார்.

3 image temp 1 1

வாரம்முழுவதும் பள்ளி,அலுவலகம் என டென்ஷனுடம் சுற்றும் குடும்பத்தினர் வார இறுதி நாட்களில் இங்கே வந்துவிடுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் தங்களுக்கு விருப்பமான காய்கறிகளின் விதைகளை விதைப்பது, இயற்கை உரம் கொடுப்பது, விளைந்த காய்கறிகளை அறுவடை செய்வது என மன மகிழ்ச்சியுடம் நேரம் செலவழித்து வருகின்றனர். இப்படி பல குடும்பங்களை செல்போன் பிடியில் இருந்து மீட்டு இயற்கையுடன் பழக வாய்ப்பளித்து வரும் அர்ச்சனாவிடம் அவர் அனுபவங்களை கேட்டபோது புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

இயற்கையை காக்கவேண்டும் என்பதே உயிர்மூச்சு;

greenspic kDLG 621x414@LiveMint 1

இப்போது நீங்கள் குடும்பமாக பலரும் இங்கே விவசாயம் செய்வதை பார்க்க முடியும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாடித்தோட்டம் மட்டுமே அமைத்து கொடுத்து வந்தேன். நிறைய பேர் தொலைபேசியில் அழைத்து தங்கள் வீட்டின் இடவசதிக்கு ஏற்ப மாடித்தோட்டம் அமைக்க உதவி கேட்பர். பலரும் காய்கறிகளை வளர்க்க இட வசதி இல்லை, அதற்கு எதாவது வழி செய்ய முடியுமா என கேட்டு வந்தனர். அப்போதுதான் விவசாய நிலங்களில் ஆர்கானிக் காய்கறிகளை, மாடித்தோட்டம் அமைக்க முடியாதவர்களை வைத்தே விளைவித்தால் நன்றாக இருக்குமே என்ற யோசனை தோ ன்றியது. இதன் மூலம் தங்களுக்கு தேவையான காய்கறிகளை மக்களே தேர்வு செய்து விதைத்து வளர்க்கலாம். அதுமட்டும் இல்லாமல் பல விவசாயிகளும் முதலீடு இல்லாததால் விவசாய நிலங்களில் பயிரிட முடியாமல் தவித்து வந்ததை அறிந்தேன். உடனே விவசாயிகளிடம் அவர்கள் நிலத்தை குத்தகைக்கு கொடுக்கமுடியுமா என்று கேட்டு என் எண்ணத்தை பகிர்தேன். பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து தாமாக முன்வந்து நிலத்தை கொடுத்தனர்.

Importance of farmers in our society and how they are shaping our world 1

இதன்மூலம் ஆரம்பத்திலேயே விவசாயிகளுக்கு பணம் கிடைக்கும். ஒரு குடும்பத்தினருக்கு 1000 சதுர அடி நிலம் பிரித்தோம். அந்த இடத்திற்காகவும், காய்கறிகளை பராமரிக்கவும் மாதம் 3000ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். வார இறுதி நாட்களில் மட்டுமே தங்கள் இடத்தில் விளைந்துள்ள காய்கறிகளை பார்க்க பலர் வருவர். சிலர் மாதம் ஒருமுறை வந்து பார்த்துச் செல்வர். மற்ற நாட்களில் விவசாயிகளே செடிகளை பராமரித்துக் கொள்வர். நிலத்தை காண வரமுடியாதவர்களுக்கு நாங்களே அவர்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்துவிடுவோம். வாரம் 7 முதல் 10 கிலோ காய்கறிகள் கிடைக்கும். தற்போதைக்கு சென்னையை அடுத்த திருவள்ளூர், திண்டிவனம் உள்ளிட்ட மூன்று இடங்களில் காய்கறி தோட்டம் வைத்துள்ளோம். ஒவ்வொரு இடத்திலும் சுமார் 50 குடும்பங்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வளர்த்து வருகின்றனர்.

L1250588 1200x802

வாரம் முழுவதும் காய்கறிகளை இயற்கை உரம் கொடுத்தும், பூச்சி தாக்குதல்களில் இருந்தும் விவசாயிகள் பாதுகாக்கின்றனர். இதன்மூலம் வருமானம் இல்லாமல் தவித்த விவசாயிகள் பலரும் ஆதாயம் அடைந்து வருகின்றனர். காய்கறிகள் மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளையும், பழங்களையும் வளர்த்து வருகின்றோம். இந்த மாதம் முதல் நாட்டுக்கோழி வளர்க்கும் பணியையும் தொடங்கி இருக்கின்றோம். விவசாயத்தை அடுத்து எனக்கு மிகவும் பிடித்தது பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு காய்கறி வளர்ப்பு குறித்து கற்றுக்கொடுப்பது தான். பல தனியார் பள்ளிகளில் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப தோட்டம் அமைத்து, அங்கு பயிலும் மாணவர்களுக்கு செடிகளை பராமரிப்பது எப்படி என்பதைப் பற்றி கற்று கொடுக்கின்றேன். மாணவர்கள் ஆர்வமுடன் கற்பதோடு, தங்கள் வீடுகளிலும் காய்கறிகளை வளர்ப்பதாக கூறுகின்றனர். இதன்மூலம் அடுத்த தலைமுறைக்கும் இயற்கையை கொண்டு செல்கின்றேன். இதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறில்லை எனக்கூறி தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளை அள்ளி அணைத்து ஆர்ப்பரிக்கிறார் அர்ச்சனா.

கரம் கோர்ப்போம் இயற்கையை பாதுகாக்க;

feat Agricultural Land

தொழில்நுட்ப வளர்ச்சி என்ற மாய உலகில் நாம் அனைவரும் மண்டியிட்டு கிடக்கிறோம். நிஜத்தையும் நிழலையும் பிரித்துப் பார்க்கதெரியாமல் தவிக்கிறோம். உண்மையில் நாம் கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பாதுகாப்பானதா என்றால் அதற்கு பதில் நிச்சயம் இல்லை. ரசாயன உரங்களால் நாம் நம் இயற்கையை அழிப்பதுடன் ஆரோக்கியத்தையும் சிதைத்து வருகின்றோம் என்றால் அது மிகையல்ல. அர்ச்சனாவைப் போல நாமும் இயற்கையை காக்கவும் விவசாயிகளை காக்கவும் ஏதோ ஒருவகையில் களம் காண வேண்டிய தருணம் இது. வாருங்கள் ஒன்றிணைவோம். வீட்டிற்கு ஒரு செடியாவது வளர்ப்போம்…

Newsnation_Admin

Next Post

இன்றைய ராசி பலன் அக்டோபர் 20, 2019

Fri Oct 11 , 2019
மேஷம் : விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.உங்களின் நற்செயல்கள் அனுகூல பலன்களை பெற்று தரும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள். ரிஷபம் : சிலர் சுயலாபத்திற்காக உதவ முன் வருவர். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதி தரும். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வெளிப் பயணம் அலைச்சலைத்தரும். […]
rp26.6 3

You May Like