மருமகன் ரிஷி சுனக்கிற்கு மாமனார் வாழ்த்து ….

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்கும் மருமகன் ரிஷி சுனக்கினை வாழ்த்தி இருக்கிறார் மாமனாரும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி.

இங்கிலாந்தின் பிரதமராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் 57 வது பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் 42வயது நிரம்பிய நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.
ரிஷி சுனக்கிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நெருக்கம் ஏராளம். பெற்றோர் இருவருமே இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் வழி தாத்தாக்கள் இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள். இந்தியாவை பூர்விகமாக கொண்ட ரிஷி சுனக்கின் பெற்றோர்கள் இருவரும் 1960 ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.
இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிள்ளைகள் த்தம்பதிக்கு கிருஷ்ணன், அனுஷ்கா என்று இரு கள்கள் உள்ளனர். ரிஷி சுனக் தனது மனைவி, குழந்தைகளுடன் அடிக்கடி பெங்களூருக்கு வந்து செல்வது வழக்கம் .
ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் நெகிழ்ந்து போயிருக்கிறார் நாராயண மூர்த்தி. இது குறித்து அவர், ‘’ரிஷிக்கு எனது வாழ்த்துக்கள். அவர் இங்கிலாந்து பிரதமர் ஆவதால் நாங்கள் பெருமை அடைகிறோம். அவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம் . அவர் நிச்சயம் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு நல்லதை செய்வார்’’ என்று கூறியிருக்கிறார்.

Next Post

துணை வேந்தர்கள் பதவியில் தொடர அனுமதி...

Tue Oct 25 , 2022
பதவியில் நீடிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமைக்கான காரணத்தைக் காட்டுமாறு 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார். கேரள உயர் நீதிமன்றம், வேந்தர் என்ற முறையில் ஆளுநர் இறுதி முடிவு எடுக்கும் வரை, மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை பதவியில் தொடர அனுமதி அளித்துள்ளது.பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, கேரளத்தில் […]
இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு..!! 72 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது..!!

You May Like