திணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி? இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா!!! இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. "கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்..! தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை..! “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்..! “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்..! பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்..! கடனை வசூலிக்க அதிரடி..! என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்..? மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..! அம்பானியின் அடுத்தக்கட்ட அதிரடி..!

ஊரடங்கை மீறியதால் போலீசார் நடத்திய கொடூர தாக்குதல்.. தந்தை, மகன் உயிரிழந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..

தூத்துக்குடியில் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பொதுமக்கள்

தூத்துகுக்டி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜின் மகன் பெனிக்ஸ். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி, ஊரடங்கை மீறி, கடையை திறந்து வைத்ததாக, ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காவல்நிலையத்தில், பெனிக்ஸ் முன்பு, அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்தாகவும், அதனை தட்டிகேட்ட பெனிக்ஸுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்ற, காவல்துறையினர் பெனிக்ஸை பல மணி நேரம் கட்டிவைத்து அடித்ததாகவும், அவரது ஆசனவாய் உள்ளே லத்தியால் குத்தி கொடூரமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பெனிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சூழலில் நேற்றிரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, பெனிக்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று பெனிக்ஸின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் இருப்பதாக கூறி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரும் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதால் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, சாத்தான்குளம். பேய்க்குளம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சாத்தான்குளம் பழைய பேருந்துநிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

1newsnationuser1

Next Post

உடல்எடையை குறைக்க வாக்கிங் வேணாம்..ஒரு ஹாரர் படம் போதும் தெரியுமா?

Tue Jun 23 , 2020
இன்றைய காலகட்டத்தில், எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் ஒரு பெரும் பிரச்சினையாகி மாறி உள்ளது. அனைவரும் அதைக் குறைக்க நடைபயிற்சியை மேற்கொள்ள விரும்பினாலும், சோம்பேறிதனம் என்பது பலருக்கும் தடையாக அமைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நடைபயிற்சி இல்லாமல் கூட எடையை குறைக்க முடியும் என்று ஒரு நல்ல செய்தி மக்களுக்கு உள்ளது. அதற்கு நீங்கள் பயத்தை எதிர்கொள்ள வேண்டும். ஆமாம், ஒரு திகில் படம் பார்ப்பது 30 நிமிட நடைப்பயணத்தை விட […]
images 83

You May Like