ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

திரையில் அல்ல கதையிலும் அல்ல..மனிதன் காணும் ஒரே ஒரு ரியல் ஹீரோ தந்தை

கருவறையில் இருந்து வெளியேறியதும் கரங்களில் ஏந்தும் தனது சிசுவை, தன் இறுதி மூச்சு வரை மார்போடு அணைத்து காக்கும் உறவே தந்தை.

Happy Father's Day 2019: Date, History, Importance and why we ...


மாற்றில்லா உறவான தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயின் அன்பு எல்லோருக்கும் தெரியும்படி தட்டில் வைத்த தீபம் என்றால் தந்தையின் அன்பு கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கு அடியில்பெருக்கெடுத்து ஓடும் நீரோடை போன்றது. தாய் கருவில் பத்துமாதம் தான் சுமக்கிறாள். தந்தையோ தன் பிள்ளைகளை வாழ்நாளெல்லாம் நெஞ்சிலும் கண்ணிலும் வைத்து சுமக்கிறார்.

ஜனிக்கும் சிசுவுக்கு காப்பாளனாய், வளரும் சிறுவனுக்கு முதல் ஆசானாய், டீன் ஏஜ்களில் வழிகாட்டியாய், தோளுக்கு மேல் வளர்ந்த மகனுக்கு சிறந்த நண்பனாய், தன்னை போல் தனது மகனும் வாழ்க்கையில் எதையும் இழந்து விடக்கூடாது எனும் எண்ணத்திலேயே நாளொரு வண்ணமும், எந்த எதிர்பார்ப்பும் இன்றி பிள்ளைகளுக்காக உழைக்கும் ஆகச் சிறந்த ஒரு வரம் தந்தை.

Happy Father's Day: 7 fun and unique ways to make the day ...

பிள்ளைகளை நோயில் இருந்து,ஆபத்தில் இருந்து, காக்கவும் அவர்களை நன்றாகப் படிக்க வைத்து சொந்த காலில் நிற்க வைக்கவும், ஆளாக்கவும், பிள்ளையின் முன்னேற்றத்தில் கண்கள் கசிய நிற்கும் தந்தையை போல் வேறு யார் உண்டு. குடும்பத்தைப் பேணி காப்பதில் தாயின் அன்புக்கு சிறிதும் குறைந்தது அல்ல தந்தையின் தியாகம். எந்த ஒரு குடும்பமும் தந்தையால்தான் ஆலமரமாக வேரூன்றி வளர்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

மனிதன் ஒருவனின் இரக்க குணத்திற்கு தாயின் பாசம் ஆதாரமானல் போட்டியும், பொறாமையும் கொண்ட இந்த உலகை நெஞ்சுரம் கொண்டு எதிர்த்து நின்று தனக்கான வெற்றிப் பாதையை ஒருவன் உருவாக்கி அதில் பயணிக்க வேண்டும் எனில் அதற்கான ஒரே வழிகாட்டியாய் தந்தையாக மட்டுமே இருக்க முடியும்.

திரையிலும், கதையிலும் ஆயிரம் ஆயிரம் ஹீரோக்கள் வந்தாலும், ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் காணக்கூடிய ஒரே உண்மையான ஹீரோவான தந்தையர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

1newsnationuser4

Next Post

சிறுநீரக கல் பிரச்சனையை தீர்த்து அதை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிய வழிகள்

Sun Jun 21 , 2020
நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது மென்மேலும் அதிகரித்து உடலின் அடுத்தடுத்த உறுப்புகளையும் பாதிக்க கூடும். முன்னெச்சரிகை உடன் செயல்பட்டு சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் ஏற்படும் பாதிப் பிரச்சனைகளை தவிர்த்துவிட முடியும். சிறுநீரகப் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருப்பது சீறுநீரகத்தில் கல், இந்த பிரச்சனை வந்த பிறகு அதற்கு பல வைத்தியங்களை உள்ளன. ஆனால், நம் சிறுநீரகத்தை ஆரோக்யமாக […]
n190979194a5261f2473a7a2a7a681d1177799208a70572bd8eadacb82d43693bcad14de60

You May Like