இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை 80% வரை நோய்த் தொற்றை குணப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு தீவிரமடைந்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை இல்லாத புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,10,461-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல்வேறு உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, அதனை பரிசோதிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன,
இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஃபேவிபிராவிர் என்ற மாத்திரையை மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவசரகால பயன்பாட்டின் கீழ், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் இந்த மாத்திரைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த மாத்திரை நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு 88 சதவீதம் வரை குணமடையும் வாய்ப்பு உள்ளது. இந்த மாத்திரையின் விலை ரூ. 103 என்ற நிலையி, 34 மாத்திரைகள் அடங்கிய ஒரு பாக்கெட் ரூ. 3500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. , மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் பாதிக்கக்கூடிய சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்பு கொண்ட கொரோனா நோயாளிகளுக்கும் கொடுக்கலாம். இந்த மாத்திரைகள் ஃபேவிஃபுளூ பிராண்டின் கீழ் மருத்துவனைகள் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும்.

எனினும் நோயாளிகளின் முழு ஒப்புதலை கையொப்பம் வாயிலாக பெற்ற பிறகே விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள், முதல் நாள் 9 மாத்திரைகள் வீதம் 2 வேளை எடுக்க வேண்டும். அடுத்த 13 நாள்களுக்கு 4 மாத்திரை வீதம் 2 வேளை எடுத்துக் கொண்டால் போதும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில், 2,050 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மாத்திரையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் நோயாளிகளுக்கும், இன்புளுயன்சா வைரஸ் தொற்று காய்ச்சலுக்கும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் 2,141 நோயாளிளுக்கு நடத்திய சோதனையில், 88 சதவீத பேருக்கு வெற்றி பெற்றுள்ளது.

இதேபோல் கனடாவிலும், ஃபாவிபிராவிர் மாத்திரைகள், 760 நோயாளிகளுக்கு சோதனை நடைபெற்றுள்ளது. சீனாவில் இரண்டு ஆய்வுகள் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டின. ரஷ்யாவில் 90 நோயாளிகடம் நடத்தப்பட்ட ஆய்வில், 80 சதவீதம் மற்றும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.