மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஆடவ கிரிக்கெட்டர்களுக்கு இணையான ஊதியம் ….

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் இனி ஆடவர் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் உள்ளன. பிற நாடுகளில் ஆடவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் நிலையில் இந்தியாவில் மட்டும் பாலின பாகுபாடு பார்க்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இதனை களையும் விதமாக பி.சி.சி.ஐ. ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி மகளிருக்கும் ஆண்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகளிர் அணியினிர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம் , ஒரு நாள் போட்டிக்கு ரூ.6 லட்சம் , டி.20 போட்டிக்கு ரூ.3 லட்சம் ஊதியம் மகளிருக்கு வழங்கப்பட உள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா டுவீட் செய்துள்ளார். பெண்கள் ஐபிஎல் முதல் சீசன் 2023 ல் நடத்தப்படும் என பி.சி.சி.ஐ. . ஏஜிஎம்மில் முடிவு செய்யப்பட்ட சில நாட்களில் இந்த தகவல் வந்துள்ளது. 2017 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததில் இருந்து இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த அணி 2020-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு சென்றது மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.

Next Post

’உடல் ரீதியாக டார்ச்சர்’..!! ரெகானா பாத்திமா மீது அவரது தாய் பரபரப்பு புகார்..!!

Thu Oct 27 , 2022
என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ரெகானா சித்ரவதை செய்வதாக அவரது தாயார், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கேரளாவில் சமூக ஆர்வலராக அறியப்படுபவர் ரெகானா பாத்திமா. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது என்று பக்தர்கள் போராட்டம் நடத்திய நேரத்தில், கோவிலுக்கு சென்று பல்வேறு சர்ச்சையில் சிக்கியவர்தான் ரெகானா. அதன்பின்னர், மாட்டு இறைச்சி பற்றிய ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். மேலும், குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் […]
’உடல் ரீதியாக டார்ச்சர்’..!! ரெகானா பாத்திமா மீது அவரது தாய் பரபரப்பு புகார்..!!

You May Like