அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

கொரானாவை தெறிக்கவிட்ட பெண் பிரதமர்கள்..

வல்லரசு நாடுகளும், பெருந்தலைவர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்களும் கூட, கொரானாவை விரட்ட போராடி வரும் நிலையில் சில பெண் பிரதமர்கள் அதை சிறப்பாக கையாண்டு கட்டுப்படுத்தியுள்ளனர்.

trump n 1

ஜெர்மனி, பின்லாந்து, பெல்ஜியம், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் கொரானாவை சிறப்பாக கையாண்டு பரவலை கட்டுப்படுத்தியுள்ளன. இந்த நாடுகள் அனைத்திற்கும் உள்ள ஒற்றுமை இந்த ஆறு நாடுகளையும் பெண்கள் தலைமைதாங்கி வழிநடத்துகிறார்கள் என்று நெட்டிசன்கள் பாராட்டுகாளை குவித்து வருகின்றனர்.


நியூசிலாந்து பிரதமர் ஜாசின்டா அர்டெர்ன், கொரானா வைரசிற்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, வாஷிங்டன் போஸ்டில் வெளியாகி உள்ள தலையங்கத்தில், நியூசிலாந்து கொரானவை தட்டையாக்கவில்லை. மாறாக அடித்து நொறுக்கியுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அந்த நாட்டில் தொடர்ச்சியாக இரண்டு நாள்களாக கொரானாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரானா பாதிப்பு குறித்து அர்டெர்ன் தெரிவித்த ஒரு கூற்று பரவாலகப் பேசப்பட்டது. ஒவ்வொரு நியூசிலாந்து குடிமகனும் தனக்கு கொரானா பாதித்தது போன்று செயல்படுங்கள் என்பதுதான் அது.

images 57

ஜெர்மனியின் பிரதமராக ஏஞ்ஜெலா மேர்கல் இருக்கிறார். அவரும் கொரானா பரவலை தடுப்பதில் வெற்றி கண்டுள்ளார். ஜெர்மனியில் 1,18,235 பேர் கொரோனாவால் பாதிகப்பட்டுள்ள நிலையிலும், ஜெர்மனியில் 52,407 பேர் கொரானா வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். ஜெர்மனியில் குணமடைபவர்கள் 95 சதவீதமாக உள்ளனர். அவர், மார்ச் 11-ம் தேதியிலிருந்தே சமூக இடைவெளி குறித்து வலியுறுத்தி வந்தார். ஜெர்மனியில் மூன்றில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவார் என்று மேர்கெல் பேசியது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெர்மனி வாரத்துக்கு 5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளது. இது மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் அதிகம். அரசு அறிவித்த சமூக இடைவெளி மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. பொருளாதாரத்துக்கா 1.1 டிரில்லியன் பணம் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

images 61 1

பெல்ஜியத்தின் பிரதமர் சோபி வில்மெஸ் இருந்துவருகிறார். பெல்ஜியத்தில் கொரோனா பாதிப்பு இதுவரையில் குறையவில்லை. இருப்பினும், அவர்களின் இறப்பு விகிதம் 50 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா இறப்பு 10 பேரை எட்டிய நிலையிலேயே, வில்லியம்ஸ் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துவிட்டார். அதேபோல, பிரதமர் சன்னா மாரின் தலைமையிலான ஃபின்லாந்தில் ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து தினசரி இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குணமடைந்தவர்களின் விகிதம் 88 சதவீதமாக உள்ளது. அந்த நாட்டில், ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

images 60

பிரதமர் காட்ரின் ஜகோப்ஸ்டாட்டிர்ஸ் தலைமையிலான ஐஸ்லாந்தில், 99 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதித்த பொருளாதாரத்துக்கு 1.6 பில்லியன் டாலர் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் 75 சதவீத மக்களுக்கு அடுத்த இரண்டரை மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கின் பிரதமராக மெட்டி ஃபிரிடெரிக்சென் இருந்து வருகிறார்.டென்மார்க்கிலும், ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

புற்றுநோய் பாதித்த மனைவியை கும்பகோணம் டூ புதுச்சேரிக்கு சைக்கிளில் கொண்டுவந்த பாசக்கார கணவர்..!

Sat Apr 11 , 2020
மனைவிக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவரை சைக்கிளில் வைத்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த பாசக்கார கணவரை, மக்கள் வெகுவாக பாராட்டினர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அறிவழகன் (65); இவரது மனைவி மஞ்சுளா (60). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மஞ்சுளாவை புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க அறிவழகன் முடிவு செய்தார். இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகம் […]
1586580501520

You May Like