எப்படியாவது கண்டுபுடுச்சர்ராய்ங்களே!! விஜய் பாட்டு… தொடரும் ட்ரோல்…

நடிகர் விஜய் பாடி நேற்று வெளியான ’’ரஞ்சிதமே, ரஞ்சிதமே’’ பாடல் ஏற்கனவே வெளியான திரைப்படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட மெட்டுதான் என்று தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ள நிலையில் அது பழைய பாடலின் காப்பி எனவும், தெலுங்கில் கலக்கி வரும் இசையமைப்பாளர் தமன், தமிழுக்கு மட்டும் காபி  பாடலை கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ரஞ்சிதமே’ நேற்று யூடியூபில் வெளியானது. தமன் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பாடலில் இடையில் வரும் மெட்டுக்கள் கடந்த காலங்களில் கிராமப்புறங்களில் மெகா ஹிட் அடித்த ‘மொச்ச கொட்ட பல்லழகி’ பாடலின் மெட்டு எனவும் அதை தெரியாமல் சுட்டு இசையமைப்பாளர் தமன் தனது பாடலில் பயன்படுத்தியிருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
https://m.facebook.com/story.php?story_fbid=1565476910565404&id=100013093306159&scmts=scwsplos

Next Post

திருட்டு சம்பவங்கள் பற்றிய செய்தி: நேலையில் கிளி ரிப்போர்ட்டரின் இயர்போனை திருடியது! சுவாரஸ்ய வீடியோ!

Sun Nov 6 , 2022
தென் அமெரிக்க நாட்டின் சிலி பகுதியில் நிரூபர் ஒருவர் திருட்டு சம்பவங்களைப் பற்றி செய்தி வழங்கிய போதே அவர் மீது அமர்ந்த கிளி அவரது காதில் பொருத்தியிருந்த இயர்போனை திருடிச் சென்றது. தென் அமெரிக்காவின் சிலியின் சான்டியகோ பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்கின்றது. இது பற்றி அந்நாட்டின் தொலைக்காட்சி நிரூபர் நிகோலஸ் க்ரூம் என்பவர் செய்திகளை நேரலையில் வழங்கிக் கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து நேரலையில் பேசிக் கொண்டிருந்தார்… ’’ பாதுகாப்பு […]

You May Like