யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் ? குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு

ஜிஎஸ்டி வரி அபராதம் ரத்து – மத்திய அரசு

ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

The Minister of State for Commerce  Industry Independent Charge Smt. Nirmala Sitharaman addressing a press conference in New Delhi on October 14 2016

ஜிஎஸ்டி கவுன்சின் 40வது கூட்டம் வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடிய சட்டக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது:

ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது. வருமான வரியை முழுமையாக செலுத்தியிருந்தால் ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கலில் தாமதம் ஆனாலும் அபராதம் இருக்காது என்றார்.

202006121633049443 Tamil News GST Council Meet FM gives relief to small

ரூ.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு தாமதமாக ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான வட்டி விகிதம் 9% ஆக குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டும் வட்டி விகிதம் குறைக்கப்படும். கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சர்களின் வேண்டுகோளின் பேரில், ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஜூலை மாதம் பிரத்யேகமாக ஒரு கூட்டம் நடத்தப்படும் என, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், நிலுவையில் உள்ள 2017-18 ஆம் ஆண்டிற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை ரூபாய் 4 ஆயிரத்து 73 கோடி ரூபாயையும், 2018-2019 ஆண்டிற்கு நிலுவையில் உள்ள 553 கோடி ரூபாயையும், 2019-2020 ஆம் ஆண்டிற்கு நிலுவையிலுள்ள ஆயிரத்து 101 கோடியையும், மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார்.

1newsnationuser4

Next Post

‘கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்.. உடல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படுகின்றன’ உச்சநீதிமன்றம் வேதனை...

Fri Jun 12 , 2020
கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுவதாகாவும், உடல்கள் குப்பை தொட்டியில் வீசப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வானி குமார், கொரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவது குறித்து உச்சநீதிமன்ற தலமை நீதிபதி எஸ்.ஏ பாப்தேவிற்கு கடிதம் ஒன்று எழுதினார். மேலும், கொரோனாவால் மரணமடையும் நபர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் எனவும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் […]
கொரோனா நோயாளிகள்

You May Like