ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! வீடு தேடி வந்து பெண்ணை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபர்..! பட்டபகலில் நடந்த பரபரப்பு..! பிரபல இயக்குநருக்கு மியூசிக் போட்ட நடிகர் விவேக்! கண்ணான கண்னே – வைரல் வீடியோ உள்ளே நடிகர் ரஜினியின் அதிரடியான அடுத்தக்கட்ட நகர்வு ! உற்சாகத்தில் ரசிகர்கள் – தீபாவளிக்கு என்ட்ரி சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கிவிட்டதாம்… மருத்துவமனை தகவல் "எங்களுக்கு இது தான் வேலையா.. படம் வந்த பிறகு பாருங்க" சீமானுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி தலையில் பைக்கை சுமந்து பேருந்தில் ஏற்றும் நபர்.. “வறுமையை ஆபாசமாக பெருமைப்படுத்தும் அறிவுஜீவிகள்..” #Video நடிகர் சித்தார்த்துக்கு திருமணம் – குவியும் வாழ்த்துகள் ஆதார் எண், ஓடிபி போன்ற விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்; அரசு பலாத்காரம் செய்தது அவர் தான்.. ஆன குழந்தைக்கு அப்பா அவரு இல்ல..! சிறை தண்டனையின் போது வெளியான அதிர்ச்சி..! மோடி இந்த சட்டத்தைக் கொண்டுவந்தால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்.. திரிணாமூல் காங்., எம்.பி சவால்.. "வெற்றி பெற்றால் அதிமுக-பாஜக சேர்ந்து தான் ஆட்சி அமைக்கும்.." சி.டி.ரவியின் பேச்சால் அதிமுக அதிர்ச்சி..! "நீயா நானா கோபிநாத்" வீட்டில் மற்றுமொரு பிரபலம்..! இந்த நடிகரா அவர்..? “ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இதை மட்டும் ரத்து செய்தால்.. என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்..” அதிமுக முன்னாள் எம்.பி பேச்சு.. பள்ளி மாணவிகளின் பாலியல் வழக்கு..! அரசு பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

சாத்தான் குளம் தந்தை, மகன் உருண்டு புரண்டதால் உள்காயம் – காவல்துறை எப்.ஐ.ஆர்

சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மாவு கட்டு போட்ட காலம் கடந்து, பிழைப்பிற்காக தொழில் செய்து வரும் வியாபாரிகளை அடித்து கொல்லும் மோசமான சம்பவங்கள் தமிழக சிறைகளில் நடைபெற்று வருகிறது.

Tn police logo

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்ததாக கூறி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் மேற்கொண்ட போராட்டத்தை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் எஸ்.ஐ.க்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பணியிடை நீக்கம் போதாது, சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

113057201 fathersonkovilpatti

இதனிடையே, ஜூன் 22ஆம் தேதி இரவு ஏழரை மணியளவில் சிறையில் இருந்த பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத் திணறுவதாகக் கூறியதாகவும் சிறைக் காவலர்கள் பென்னிக்ஸை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்ததாகவும் சிகிச்சை பலனின்றி பென்னிக்ஸ் உயிரிழந்ததாகவும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதேபோல், ஜெயராஜ் 23ஆம் தேதியன்று அதிகாலையில் சிறையில் தனக்கு உடல்நலக் குறைவு இருப்பதாக தெரிவித்ததையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி காலை 5.40 மணியளவில் உயிரிழந்ததாகவும் முதலமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.

113046556 be0405ba 95c2 4e93 9fda 81ed6c5a988e

இந்த சூழலில், இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை பதிவிட்டுள்ள எப்.ஐ.ஆர் குறிப்பில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்சை கைது செய்யும்போது அவர்கள் தரையில் விழுந்து புரண்டதாகவும், அதில் அவர்களுக்கு ஊமை காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரிசையாக சிறைகளில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்து கை மற்றும் கால்கள் முறியும் சம்பவங்கள் பழைய ட்ரெண்டாக மாறி, தரையில் விழுந்து புரண்டதால் உயிர்போகும் சம்பவங்கள் நடைபெற தொடங்கியுள்ளது.

police frined shrc

வெகுஜன மக்கள் குற்றங்கள் இழைக்கும்போது சட்டம் அவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு செயல்படும் போது, முதலமைச்சரின் கீழ் உள்ள காவல்துறையினர் தவறு இழைக்கும்போது குறிப்பிட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் அல்லது பணியிடை நீக்கம், ஆயுதப் பிரிவுக்கு மாற்றுவது அல்லது காத்திருப்பு பட்டியலில் வைப்பது போன்ற சாதாரண நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இது எந்த வகையில் அவர்களுக்கு தண்டனை ஆகும் என யாருக்கும் தெரியவில்லை. மக்கள் இந்த சம்பவங்களை மறந்ததும் அவர்கள் மீண்டும் சாதாரணமாக தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். அதையும் தாண்டி அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டாலும் அதன் விசாரணையும், தீர்ப்புகள் என்னவாக இருக்கும் என்பது புலப்படாத உண்மை ஆகிறது. ஆனால், பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு வழங்க்கும் நிவாரணமும், ஒரு அரசு பணியும் எந்த அளவிலான ஆறுதலாக இருந்துவிட முடியும்?

அன்று தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு கொன்ற சம்பவம், இன்று அதே மாவட்ட சிறையில் இருவர் உயிரிழந்தது என காவல்துறையின் அராஜகம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. அவர்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ள லத்தி மக்களை காப்பதற்கு தானே தவிர, அநியாயமாய் அவர்களின் உயிரை பறிப்பதற்கு அல்ல என்பதை என்று உணர போகிறதோ அந்த காக்கி சட்டைக்குள் ஒளிந்திருக்கும் மனித நேயம்?..

1newsnationuser4

Next Post

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 70,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு..

Thu Jun 25 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 70,000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் முதன்முறையாக ஒரே நாளில் 3,509 […]
தமிழகத்தில்

You May Like