தீபாவளிக்கு 5 நாள் பட்டாசு வெடிக்க அனுமதி!…. விடுமுறை அறிவித்து சட்டம் இயற்றிய அமெரிக்கா!

அமெரிக்காவில் தீபாவளி பண்டிக்கை அன்று பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியும், பொது விடுமுறை அறிவித்தும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தியாவை போலவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், அந்தந்த நாட்டு சட்டத்திட்டங்களின் படியே வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனடிப்படையில், அமெரிக்காவில் தீபாவளி பண்டிகைக்கு 2007ம் ஆண்டு அந்நாட்டு அரசு அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து, அங்கு, தீபாவளி பண்டிகை கொண்டாடத்தில் அந்நாட்டு அதிபர் உட்பட பெரும்பாலானோர் ஈடுபடுகின்றனர். 2002இல் இருந்து ஆண்டு தோறும் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றுவருகிறது.

இதந்நிலையில், அமெரிக்காவின் உத்தா மாகாண மேலவையில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் இந்த மாகாணத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகை காலத்தில் 5 நாள்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை அன்று மாகாணத்தில் பொது விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ பயணம்.. புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்.. விலை எவ்வளவு..?

Thu Feb 9 , 2023
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் எலக்ட்ரிக் வாகனம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.. மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி முன்னணி நிறுவனங்கள் வரை பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார், பைக்குக்ளை அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில் ஒகாயா, நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. […]

You May Like