மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

காஷ்மீரில் முதல் கொரோனா உயிரிழப்பு.. இந்தியாவில் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காஷ்மீரில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.

corona virus india

காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் 3 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை அவர் உயிரிழந்ததாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது காஷ்மீரில் ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பாகும். அவர் அண்மையில் மலேசியா சென்று நாடு திரும்பியவர் ஆவார்.

அந்த முதியவருடன் தொடர்பில் இருந்த மேலும் 4 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.

வெளிநாட்டிற்கு பயணம் செய்த 5,000-க்கும் மேற்பட்ட நபர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 4,000 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

corona-virus-09

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் 65 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது அந்த மாநிலத்தின் ஏற்பட்டுள்ள 4-வது உயிரிழப்பாகும். இதுவரை அம்மாநிலத்தில் 120-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் சுமார் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

1newsnationuser1

Next Post

சென்னை நகர் பகுதிக்கு டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடக்கம்

Thu Mar 26 , 2020
சென்னை : சென்னை அண்ணா பல்கலை சார்பில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் மூலம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி இன்று முதல் துவங்கியது. சென்னை அண்ணா பல்கலை சார்பில்  நகரின் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் 42 கிலோ எடை கொண்டுள்ள ட்ரோன் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவின் மூலம் நாளொன்றுக்கு 25 முதல் 40 ஏக்கர் வரையிலும் 8 நிமிடத்தில் 1கி.மீ வரையிலும் மருந்து […]

You May Like