"நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..! மார்ச் முதல் பழைய நூறு ரூபாய் நோட்டுகளுக்கு தடையா..? RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றாததற்கு இதுதான் காரணமாம்.. பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட தகவல்.. 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு… எப்போது முதல்..? “ட்ரம்பை பழிவாங்குவது உறுதி..” ஈரான் உச்ச தலைவர் பெயரில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. நடவடிக்கை எடுத்த ட்விட்டர்.. மனிதர்களை அடித்து சாப்பிட்ட கொடூரம்..! தொல்பொருள் ஆய்வில் வெளியான அதிர்ச்சி வரலாறு..! சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது..? விக்டோரியா மருத்துவர் வெளியிட்ட தகவல்.. நள்ளிரவு 12.30 மணிக்கு கோலி அனுப்பிய மெசேஜ்.. ‘மிஷன் மெல்பர்ன்’ பற்றிய தகவல்களை வெளியிட்ட இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் பாகிஸ்தான் எல்லையில் பிடிப்பட்ட காதலன்..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ. : ஜெ. அன்பழகனின் அரசியல் பயணம்..

இந்தியாவிலேயே கொரோனா

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் இன்று காலமானார். அவருக்கு வயது 62. இந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ அன்பழகன் ஆவார். திமுகவில் திறம்பட பணியாற்றிய ஜெ. அன்பழகன் 1958-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி பிறந்தார். அவரது 62-வது பிறந்தநாளான இன்று அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெ.அன்பழகனின் அரசியல் வாழ்க்கை குறித்து தற்போது பார்க்கலாம்..


1949-ம் ஆண்டு திமுக தொடங்கியதில் இருந்தே, அக்கட்சியில் இருந்தவரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பர்களில் ஒருவருமான, பழக்கடை ஜெயராமனின் மகன் தான் அன்பழகன்.1958 ஜூன் 10 ம் தேதி பிறந்தவர், பி.ஏ பொருளாதாரம் படித்துள்ளார்.

எமெர்ஜன்ஸி காலக்கட்டத்தில் ஸ்டாலின், முரசொலி மாறன், பழக்கடை ஜெயரான் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழும்பூரில் திமுக தலைவர் கருணாநிதி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்த ஜெ.அன்பழகனும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

palakadai jayaraman
அன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமன்

1985-ம் ஆண்டு அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் இறந்த பிறகு, அவர் வகித்த தி.நகர் பகுதி செயலாளர் பொறுப்பை ஏற்றார் அன்பழகன். சென்னை தி.நகரைச் சுற்றியே அமைந்திருந்தது ஜெ. அன்பழகனின் வாழ்க்கை. பின்னர் 1995-ம் ஆண்டு அவருக்கு கல்லீரலில் கோளாறு ஏற்பட்டதால், லண்டன் மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதிலிருந்து மீண்ட அன்பழகன் 2001-ம் ஆண்டு, தி.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

சட்டப்பேரவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக நேரடி விவாதங்களில் பங்கெடுத்தவர். 2001 அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வுக்கு எதிராக மறியல் போராட்டத்தை நடத்திய அன்பழகனை போலீசார் கைது செய்தனர். அவரின் கைது நடவடிக்கையை எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விடுவிக்க கோரியும், எழும்பூர் காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு திமுக தலைவர் கருணாநிதியே போராட்டத்தில் ஈடுபட்டார். கருணாநிதி, ஸ்டாலின் இருவருடனும் நெருக்கமாக இருந்தவர்களில் அன்பழகனும் ஒருவர்.

vikatan 2019 05 f9fbb860 17ff 4638 a992 5e26957780b8 133938 thumb

பின்னர் 2011 , 2016 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட செயலாளர் பொறுப்பில் திறம்பட பணியாற்றிய அன்பழகன், கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில், மனதில் படும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடியவராகவும் இருந்தார்.

அன்பு பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைத்துறையிலும் கால் பதித்தார் அன்பழகன். “ஆதி பகவன்” திரைப்படம் மூலம் தயாரிப்பாளர் ஆனார். “யாருடா மகேஷ்” மூலம் விநியோகஸ்தர் ஆனார். விஜய்யின் தலைவா படத்திற்கு சிக்கல் ஏற்பட்ட போது, தமிழகத்தில் 300 திரையரங்குகளில் படத்தை வெளியிட தயார் என்று அறிவித்து, ஆதரவளித்தார். சமூக வலைத்தள அரசியலுக்கு முதன்முதலில் பழகிக் கொண்ட தலைவராகவும் அவர் இருந்தார்.

anbalagan n

சென்னை பெருவெள்ளம், வர்தா புயல் பேரிடர் காலங்களில் தீவிர களப்பணியாற்றினார் அன்பழகன். தற்போது கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்திலும் தனது தொகுதி மக்களுக்கு, நிவாரண பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்ட அன்பழகன், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

1newsnationuser1

Next Post

"எனக்கும் நிறவெறி தாக்குதல் நடந்தது" மனமுடைந்த டேரன் சமி!!!

Wed Jun 10 , 2020
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் டேரன் சமி, தனக்கு ஐபிஎல் தொடரின் போது நிறவெறி தாக்குதல் நடந்தாக மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் டேரன் சமியும், இலங்கை அணியின் ஆல் ரவுண்டரான திசாரா பெரேரோவும் விளையாடும் போது சக வீரர்களால் ‘காலு’ என தான் கேலி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கு அர்த்தம் ‘பலமான கருப்பன்’ என்று தான் நினைத்ததாகவும் சக வீரர்கள் […]
04 1459748361 darren sammy43 600

You May Like