கொரோனாவுக்கான இந்தியவாவின் முதல் தடுப்பு ஊசியை, பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் வி.கே ஸ்ரீனிவாஸ் முதல் நபராக செலுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து, ‘கோவேக்சின்’ என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியின், இரண்டாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதலை பெற்றது.
மனிதர்களிடம் நடத்தப்படும் முதல் கட்ட பரிசோதனையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களிடம், குறிப்பிட அளவிலான டோசுகளுடன் நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் மற்றும் பக்கவிளைவுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட சோதனை சற்று அதிக எண்ணிக்கையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் வி.கே ஸ்ரீனிவாஸ் இந்த மருந்தை தனது உடலில் செலுத்தி சோதனை செய்து வருகிறார். இந்தியாவில் கொரானா தடுப்பு ஊசியை முதலில் செலுத்திக் கொண்ட நபர் இவர்தான். தனது மருந்து மீது கொண்ட அதீத நம்பிக்கையால் தானே முதல் மனிதராக சோதனை முயற்சியில் இறங்கியிருக்கிறார்.