இந்தியாவில் முதல்முறை..!! கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை..!! பிப்.9இல் ஒப்பந்தப்புள்ளி..!!

மும்பையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படவுள்ளது. இந்தியாவில் முதன் முதலாக கடலுக்கு அடியில் அமைக்கப்படும் முதல் சுரங்கபாதை இதுவாகும்.

’பிரதமர் மோடியின் கனவு திட்டம்’ என்று சொல்லப்படும் மும்பையிலிருந்து அகமதாபாத்துக்கு புல்லட் ரயில்பாதை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 508 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கான தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிகள் ஜப்பான் நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொலைவுள்ள சுரங்கபாதையில் 7 கிலோமீட்டர் தொலைவிலான சுரங்கபாதை கடலுக்கு அடியில் அமைய இருக்கிறது. தானே கிரிக் என்ற இடத்தில் இந்த சுரங்க பாதை அமைக்கப்பட இருக்கிறது.

பந்த்ரா குர்லா காம்பளக்ஸ் மற்றும் சில்பட்டா என்ற இரு நிறுத்தங்களுக்கு இடையே இந்த சுரங்கபாதை அமைய இருக்கிறது. தற்போது இந்த 21 கிலோமீட்டருக்கு சுரங்க பாதை அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. ஏற்கெனவே இந்த சுரங்கபாதை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பின்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

#Breaking..!! ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக போட்டி இல்லை..!! டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு..!!

Tue Feb 7 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பல்வேறு இடங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அவர்கள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒவ்வொரு வரும் […]

You May Like