கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்க கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வேகமாக காற்று வீசும் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்து. கடலூரில் கடல் சற்று சீற்றத்துடனும் கொந்தளிப்புடனும் காணப்படுகிறது.
அரபிக் கடலில் புயல் உருவாகியுள்ளதால் தமிழக வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும் கடலில் 55 கி.மீ- 65 கிமீ வரையான வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாதென கடலூர் மாவட்ட மீன்வளதுறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கடலூர் துறைமுகம் மற்றும் கடலோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
Fri Jun 9 , 2023
மதுரை தெற்குதொகுதி முற்பட்ட காமராஜபுரம், பாலரங்கபுரம், அனுப்பானடி, சிந்தாமணி ரோடு முனிச்சாலை ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளான பாதாள சாக்கடை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அங்கு ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடை திட்டம் மக்கள் குடியிருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறிய மழைக்கே அந்த பகுதி முழுவதும் கழிவு நீர் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி […]