ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த வீரர்களை ஐக்கிய நாடுகள் சபை விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது. இதில் ஐந்து இந்தியர்கள் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

உலகம் முழுவதும் உள்ள இராணுவ வீரர்கள், காவலர்கள் ஆகியோரை திரட்டி உருவாக்கப்பட்டது ஐ.நா. அமைதி படை. இவை உலகெங்கிலும் உள்நாட்டுப் போர், இனக்கலவரம் ஏற்ப்படும் போது பாதுகாப்பிற்காகவும் அமைதியை நிலைநாட்டவும் பணியில் ஈடுபடுவார்கள். இந்த படையில் இந்திய வீரர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர்.

இந்த படையில் கடந்த ஆண்டு பணியில் இருக்கும் போது வீர மரணம் அடைந்த எண்பத்து மூன்று பேரை ஐ.நா. கவுரவிக்கும் விதமாக ‘டைக் ஹைமர்சோல்டு’ பதக்கம் வழங்கப்படவுள்ளது. இதில் 5 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தெற்கு சூடானில் பணியில் இருந்த மேஜர் ரவீந்தர் சிங் சந்து, சார்ஜென்ட் லால், லெபனானில் பணியில் இருந்த ரமேஷ் சிங், காங்கோவில் ஜான்சன்பெக், எட்வர்டு அகாபிட்ட பிண்டோ போன்ற இந்தியர்களுக்கு ஐ.நா. அமைதிக்குழுவின் சர்வதேசே தினமான நாளை விருது வழங்கப்பட உள்ளது.