அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. இதுவரை இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு..

கேரளாவில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது.

kerala corona

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக, இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், இத்தாலியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த இத்தாலி சுற்றுப்பயணிகள் உட்பட 31 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு முதலில் தெரிவித்தது.

இதனிடையே நேற்று தமிழகத்தை சேர்ந்த ஒருவர், லடாக்கை சேர்ந்த இருவர் என புதிதாக 3 பேர் பாதிக்கப்பட்டதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 34-ஆக உயர்ந்தது. இதில் லடாக்கை சேர்ந்தவர்கள் ஈரானில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் என்றும், தமிழகத்தை சேர்ந்த நபர் ஓமனில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் தெரியவந்தது.

corona virus india

இந்த சூழலில் இத்தாலியில் இருந்து கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 39-ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய கேரள சுகாதார அமைச்சர் கே.கே ஷைலஜா, கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் அண்மையில் இத்தாலி நாட்டிற்கு சென்று திரும்பியுள்ளனர்.

அவர்கள் நாடு திரும்பிய பிறகு சில உறவினர்களின் வீட்டிற்கு சென்று அவர்களை சந்தித்துள்ளனர். முதலில் அந்த உறவினர்கள் தான் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் தான் இத்தாலி சென்று திரும்பிய குடும்பத்தினர் மருத்துவனைக்கு தாமதமாக வந்தனர்.

kerala health minister

அந்த குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பயண விவரத்தை கூற மறுத்துவிட்டதால், அவர்களுக்கு விமானநிலையத்தில் பரிசோதனை செய்யப்படவில்லை. அவர்கள் முதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்துவிட்டனர். பின்னர் அவர்களை கட்டாயப்படுத்தி சிகிச்சை பெற வைத்தோம்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

சீனாவில் இடிந்து விழுந்த 5 மாடி ஹோட்டல்; 70 பேர் சிக்கி தவிப்பு..!

Sun Mar 8 , 2020
சீனாவில் திடீரென இடிந்து விழுந்து கட்டட இடிபாடுகளில் சுமார் 70 பேர் சிக்கியுள்ளனர். சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் இதுவரை சுமார் 3000க்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது. மேலும், வைரஸால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அதிகப்படியான உயிரிழப்புகளை சந்தித்தது சீனா தான். இந்நிலையில்,   சீனாவின் தென்கிழக்கு புஜியன் மாகாணத்திலுள்ள குவான்ஸு என்ற இடத்தில் சின்ஜியா எக்ஸ்பிரஸ் […]
74daa545 c812 482a b1b5 cc330df8e01f Day in pictures March 7 2020 02

You May Like