Flash : இன்றும் அதிர வைத்த தங்கம் விலை..! 3 நாட்களில் ரூ.3,600 உயர்வு; கலக்கத்தில் நகைப்பிரியர்கள் !

20220728085912 Francis Wedding Ornaments 2 1

தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.91,200க்கு விற்பனையாகிறது.

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000, ரூ.87,000, ரூ.88,000, ரூ.89,000 என உச்சம் தொட்டு வந்தது.. கடந்த வாரமும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அதே போல் இந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.. குறிப்பாக நேற்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்தது..

இந்த நிலையில் இன்று காலையும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ரூ.11,400க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.91,200க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் ரூ.3,600 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.171க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,71,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : 20 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் சிரப்!. கோல்ட்ரிஃப் நிறுவன உரிமையாளர் சென்னையில் கைது!.

English Summary

Gold prices rose by Rs. 120 per sovereign today, selling for Rs. 91,200.

RUPA

Next Post

முகம் பளபளக்க கடுகு போதும்!. டானிங் ரிமூவல் பவுடர் தயாரிக்க டிப்ஸ்!. 100% ரிசல்ட் டிரை பண்ணுங்க!.

Thu Oct 9 , 2025
பண்டிகை காலம் தொடங்கியவுடன், சந்தைகளில் நெரிசல், வீட்டின் அலங்காரம் மற்றும் தயாரிப்புகளுக்கு மத்தியில், நமது சருமம் மிகவும் பாதிக்கப்படுகிறது. சூரியன், மாசுபாடு ஆகியவை தொடர்ந்து வெளிப்படுவதால் சருமத்தில் பழுப்பு நிறத்தை ஏற்படுத்துகிறது, இதன் காரணமாக முகம் மந்தமாகவும் கருமையாகவும் தோன்றத் தொடங்குகிறது. விலையுயர்ந்த பழுப்பு நீக்க கிரீம்கள் அல்லது சலூன் சிகிச்சைகளுக்குப் பதிலாக வீட்டு வைத்தியம் மற்றும் இயற்கை தீர்வை நீங்களும் தேடுகிறீர்கள் என்றால், யூடியூபர் பூனம் தேவ்னானியின் இந்த […]
tanning removal scrub

You May Like