தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. பாஸ் வைத்திருக்கும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட மைதானத்திற்கு உள்ளே நுழைந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.. மேலும் லேசான தடியடியும் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது..
பின்னர் பாஸ் அனுமதி பாஸ் இல்லாதவர்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.. எனினும் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை..
தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பிரச்சார வாகனத்தின் மீது ஏறி விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ அப்போது “ இந்த ஒன்றிய அரசுக்கு தான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி தனி இப்படி இருப்பார்கள்.. ஆனால் நாம் எல்லோரும் ஒன்று தான்.. தமிழ்நாடும் புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் எல்லோரும் ஒன்று தான்.. ஒரே சொந்தங்கள் தான்.. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமல்ல, உலகில் எந்த மூலையில் நமது வகையறாக்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் நம் உறவு தான்..
1977 எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார்கள்.. 1974-ல் புதுச்சேரியில் அவரின் ஆட்சி அமைந்தது.. புதுச்சேரி மக்களும் தமிழ்நாடு மக்கள் மாதிரியே என்னை 30 ஆண்டுகளாக தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.. அதனால் இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்கும் குரல் கொடுப்பான்..
புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு மாதிரி கிடையாது.. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர்.. அதற்காக புதுச்சேரி முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. இதை பார்த்தாவது தமிழ்நாட்டில் இருக்கும் அரசு கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.. ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள்.. வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.. புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பாதீங்க.. நம்ப வைத்து ஏமாற்றுவது தான் அவர்களின் வழக்கம்” என்று தெரிவித்தார்..



